திருச்சியில் அரசு ஐடிஐ வளாகத்தில் புதிய கட்டிடம் விழுந்து ஒருவர் பலி

திருச்சியில் அரசு ஐடிஐ வளாகத்தில் புதிய கட்டிடம்  விழுந்து ஒருவர் பலி

திருச்சி மாவட்டம் திருவெறுப்பூரில் அருகே அரசு ஐடிஐ உள்ளது. இதன் வளாகத்திற்குள் கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசின் கீழ் மகளிர் திறனை மேம்படுத்துவதற்காக செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய மகளிருகான தொழில் பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு செல்போன் தையல் ரேடியோ உள்ளிட்ட பல்வேறு பயிற்சிவகுப்புகள் மகளிருக்கு நடத்தப்படுகிறது. இந்த நிலையில் இந்த தேசிய மகளிர் காண தொழிற்பயிற்சி நிலையத்திற்கு தனி சொந்த கட்டிடம் வேண்டும் என்பதற்காக புதிதாக கட்டிடம் கட்டுவதற்கு மத்திய அரசு சார்பில் சுமார் ரூ 11 கோடி மதிப்பீட்டில் கட்டிடம் கட்டுவதற்கு மத்திய பொதுப்பணித்துறை மூலம் டெண்டர் விடப்பட்டு திருவெறும்பூர் ஐடிஐ வளாகத்தில் தேசிய மகளிருக்கான தொழில் பயிற்சி நிறுவனம் பெண்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக புதிதாக கட்டிடம் கட்டும் பணி கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வருகிறது.

இந்த கட்டிடப் பணியில் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை பீகார் மாநிலத்தை சேர்ந்த இஸ்லாம் (66)என்ற தொழிலாளி வேலை பார்த்துக் கொண்டிருந்த பொழுது கட்டிடத்தில் ஒரு பில்லருக்கும் மற்றொரு பில்லருக்கும் இடையே அமைக்கப்பட்டுள்ள பெல்ட் எனப்படும் பீம் கான்கிரீட் சரியாக பிடிக்காமல் கீழே வேலைப் பார்த்த இஸ்லாம் மீது விழுந்தது இதில் சம்பவ இடத்திலேயே இஸ்லாம் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் பற்றி தகவல் கிடைத்ததும் திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இஸ்லாம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வரும்பொழுது இப்படி கட்டிடம் இடிந்து விழுகிறது என்றால், இந்த கட்டிடத்தின் பலம் எவ்வளவு பலவீனமாக கட்டப்பட்டிருக்கும் இருக்கும் அதனால் இந்த கட்டிடத்தின் தரத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். தரம் இல்லை என்றால் உடனடியாக கட்டிடத்தை முற்றிலுமாக இடித்துவிட்டு புதிதாக கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படி தரமற்ற கட்டிடம் கட்டினால் நாளை பயிற்சி பெறும் மகளிருக்கு பெரும் ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகும் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision