நீரில் மூழ்கி நூறு ஏக்கர் நெற்பயிர்கள் நாசம்-முக்கொம்பில் அமைச்சர் கே.என் நேரு பேட்டி

நீரில் மூழ்கி நூறு ஏக்கர் நெற்பயிர்கள் நாசம்-முக்கொம்பில் அமைச்சர் கே.என் நேரு பேட்டி

திருச்சி லால்குடியில் கள்ளிக்குடி ஆலங்குடி மகாஜனம் பகுதியில் 100 ஏக்கர் நெல் பயிர்கள் கொள்ளிடம் ஆற்று தண்ணீர் கூலையாற்று மூலமாக மூழ்கியுள்ளது. தற்போது வரை 308 பேரை பேரை மீட்டு ஆறு இடங்களில் தங்க வைத்துள்ளோம். மாதவ பெருமாள் பகுதியில் 69 பேர் மீட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு மூன்று வேலை உணவு அளிக்கப்படுகிறது. தண்ணீர் வரத்து குறைந்த உடன் அவர்கள் மீண்டும் வீடுகளுக்கு அனுப்பப்படுவார்கள். கொள்ளிடம் பழைய பாலம் 3 கோடி ரூபாய்க்கு ஏற்கனவே டெண்டர் விட்டாச்சு. பழைய பாலம் விழுந்தால் நல்லது தான் புதிய பாலம் கட்டி விட்டோம்.

ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு அகிலாண்டேஸ்வரி நகர் பகுதி கரை பலப்படுத்தப்பட்டுள்ளது. காவிரி நீர் ததும்பி செல்கிறது பயம் வேண்டாம் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் கதவணைகளை பார்வையிட்டு செய்தியாளர்களிரிடம் தெரிவித்தார்.

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு காவிரி நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகம் காரணமாக பிச்சாண்டார் கோவில், நொச்சியம்,, பெருகமணி நீர்நிலைப் பகுதிகளில் இருந்து பாதுகாப்பான இடத்தில் உள்ள மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு ரொட்டி, பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழங்கினார். மேலும் இம்மக்களுக்குத் தொடர்ந்து உணவு மற்றும் மருத்துவ சேவைகளை வழங்கிட அலுவலர்களுக்கு மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் உத்தரவிட்டார்.

 இந்நிகழ்வின் போது, திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர்.க. மணிவாசன்,  ,மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப் குமார், நீர்வளத்துறை செயற்பொறியாளர்  நித்தியானந்தம் , மாவட்ட வருவாய் அலுவலர் இரா.அபிராமி, மற்றும் வருவாய்த்துறை, வளர்ச்சித் துறை, நீர்வளத்துறை உள்ளிட்ட துறைகளின் அலுவலர்கள் உடனிருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO