மாணவர்கள் மனதளவில் என்ன பாதிப்பு - திருச்சியில் அமைச்சர் பேச்சு

மாணவர்கள் மனதளவில் என்ன பாதிப்பு - திருச்சியில் அமைச்சர் பேச்சு

இணைய வசதி இல்லாத கிராமப்புற மாணவர்கள் கூட பள்ளிகள் வாயிலாக திரைப்படங்கள் குறித்து தெரிந்து கொள்ள, பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளிகளிலும் மாதம்தோறும் சிறார் திரைப்படங்கள் திரையிடும் நிகழ்வின் மூலம் நல்ல கருத்துக்களை கொண்ட திரைப்படங்களை மாணவர்களுக்கு திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறு தொடங்கப்பட்ட சிறார்களுக்கான திரைப்படம் திரையிடுதல் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  திருச்சி கீழ்ப்புலிவார்டு,  கீழரண்சாலையில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு காண்பிக்கப்படும் "சிறார் திரைப்படங்கள் திரையிடுதல்" நிகழ்வை பார்வையிட்டார். ஈரானிய திரைப்படமான சில்ட்ரன்ஸ் ஆப் ஹெவன் திரைப்படம் மாணவர்களுக்கு திரையிடப்பட்டது.

முன்னதாக இந்நிகழ்ச்சியில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி..... நான் பள்ளி மாணவனாக இருந்த பொழுது ஆசிரியர்களுடன் திரையரங்கிற்கு சென்று படம் பார்க்க வேண்டிய நிலை இருந்தது. திரைப்படங்கள் மூலம் நம் மனதிற்குள் இருக்கின்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக இருக்கிறது. மாணவர்கள் மனதளவில் என்ன பாதிக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்

பள்ளிகளில் திரையிடப்படும் படங்களை பார்த்து மாணவர்கள் கட்டுரை, கவிதை, ஓவியம் ஆகியவற்றை செய்யலாம். இதில் திறமையான மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நல்ல ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தரக்கூடிய சூழ்நிலை உள்ளது. நிலங்களில் பயிர் செய்தால் ஆறு மாதங்களில் அறுவடை செய்யலாம் ஆனால் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கொண்டு வரக்கூடிய திட்டங்கள் ஒவ்வொன்றும் விதைக்கப்படுகின்றன.

இதற்கான பலன்கள் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் வரும் பொழுது அதற்கான பலன்கள் நீங்கள் மட்டுமல்ல நல்ல ஒரு சமுதாயத்தை உருவாக்குகின்ற முயற்சியில் ஈடுபடும்.


இது போன்ற பள்ளிகளில் திரையிடப்படக்கூடிய படங்களை பார்க்கும் பொழுது மாணவர்கள் தங்களது தனித்திறமைகளை உள் மனதோடு புரிந்துகொள்ள நிகழ்வாக இருக்கும் என தெரிவித்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...   https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO