திருச்சி வருமானவரித்துறை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதற்கு வழக்கு பதிவு.

திருச்சி வருமானவரித்துறை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதற்கு வழக்கு பதிவு.

தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது வாடிக்கையாகி விட்டது. இந்நிலையில் நேற்று காலை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்துள்ளது.

இதனையடுத்து திருச்சி மாவட்ட வெடிகுண்டு செயலிழப்பு மற்றும் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் அருளானந்தம் தலைமையில் காவலர்கள் அல்லூரிசாமி ரெட்டி, பால்துரை, குமரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் பிற்பகல் 12:30 மணி முதல் 5:30 மணி வரை நடந்த சோதனையிலால் பரபரப்பு ஏற்பட்டது. வரு மான வரித்துறை அலுவல கத்தில் உள்ள கீழ்தளத்தில் இருந்து 5 அடுக்கு மாடியில் உள்ள ஒவ்வொரு அடுக்கிலும் உள்ள ஒவ்வொரு பிரிவில் உள்ள அலுவலகத்திற்குள்ளும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

இதில் குறிப்பாக அதிகாரிகள் மற்றும் வெளி ஆட்கள் வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் அனைத்து வாகனங்களையும் சோதனைக்கு உட்படுத்தினார்கள். இந்த சோதனையில் பெரிய அளவில் மர்ம பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. இருப்பினும் வருமானவரித்துறை அலுவலகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களையும் சோதனைக்கு உட்படுத்திய பின்னரே உள்ளே அனுமதிக்கின்றனர். மேலும் அந்த மின்னஞ்சல் யாரிடம் இருந்து வந்தது, அது எங்கிருந்து வந்தது என்பது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து திருச்சி வருமான வரித்துறை கூடுதல் ஆணையர், கூடுதல் ஆணையர், பீர் முகைதீன் கொடுத்த புகார் அடிப்படையில், இந்த வருமான வரித்துறை அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு, மின்னஞ்சல் செய்தி மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து கன்டோன்மென்ட் காவல்நிலையத்தில் சட்டப்பிரிவு : 217, 351(2), 351(4) of BNS Act r/w 66(c), 66(d) of IT Act-ன் படி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision