சாட்டை துரைமுருகனை ரிமான்ட் செய்ய நீதிபதி மறுப்பு
நாம் தமிழர் கட்சியை சார்ந்த நிர்வாகி சாட்டை துரைமுருகன், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூராக பேசியுள்ளார் எனவும், இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என திருச்சியை சேர்ந்த அருண்குமார் என்பவர் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் திருச்சி சைபர் போலீசார் இன்று அதிகாலை தென்காசி பகுதியில் தங்கியிருந்த சாட்டை துரை முருகனை கைது செய்து திருச்சி அழைத்து வந்தனர். தொடர்ந்து அவரை திருச்சி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
தொடர்ந்து அவரை தற்போது திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து வந்து திருச்சி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் (PCR) நீதிபதி சாமிநாதன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி நீதிமன்ற காவலுக்கு செல்ல தேவையில்லை என கூறி என்ற நீதிமன்ற காவலை ரத்து செய்தார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision