திருச்சி மேலப்புதூர் சுரங்க பாதையில் 2 அடி உயரத்திற்கு மழை நீர் - வாகன ஓட்டிகள் சிரமம்
திருச்சி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ள நீராக ஓடியது. திருச்சி மாநகரில் ஜங்ஷன், விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் 5 சென்டிமீட்டருக்கு மேல் மழை பதிவானது.
இதனால் மேலப்புதூர் சுரங்கப்பாதையில் 2 அடி உயரத்திற்கு மழை நீர் தேங்கி உள்ளது. பேருந்து மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சுரங்கப்பாதை வழியாக செல்ல முடியாமல் சிரமப்பட்டன. ஒரு சில வாகனங்கள் மழைநீரில் தத்தளித்து கடந்து வந்தன. மாநகராட்சி ஊழியர்கள் மோட்டாரை வைத்து மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல் திருச்சி சிங்காரத்தோப்பு, தெப்பக்குளம் உள்ளளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision