திருச்சி மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
திருச்சிராப்பள்ளி மாவட்டம், புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம், நெய்குளம் ஊராட்சியில் தோட்டக்கலைத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிப்பம் கட்டும் அறையினையும், நம்புக்குறிச்சி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.6.50 இலட்சம் மதிப்பீட்டில் நக்கம்பாடி ஏரி அருகில் அமைக்கப்பட்டு வரும் கதிரடிக்கும் களத்தினையும், சிறுகளப்யூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ.32.05 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் கிராம ஊராட்சி செயலக் கட்டடத்தின் கட்டுமான பணியினையும், வரக்குப்பை ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.5,32 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் சமையற்கூட கட்டுமான பணியினையும், மேலரசூர் ஊராட்சியில், பொதுநிதி திட்டத்தின்கீழ் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் பலப்படுத்தப்பட்டு வரும் தேரோடும் வீதி சாலை பணியினையும், ஒரத்தூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ.16.98 இலட்சம் மதிப்பீட்டில் சாத்தப்பாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் சுற்றுச்சுவர் கட்டுமான பணியினையும்,
வெங்கடாசலபுரம் ஊராட்சியில் 15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின்கீழ் ரூ.7.60) இலட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டு வரும் சாலைப் பணியினையும், புஞ்சை சங்கேந்தி ஊராட்சியில் பாரத பிரதம மந்திரி கிராம சலைகள் திட்டத்தின் கீழ் ரூ.29கோடி மதிப்பீட்டில் புஞ்சை சங்கேந்தி முதல் காணக்கிளி நல்லூர் வரை புதுப்பிக்கப்பட்டு வரும் சாலை பணியினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்திட சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் நெய்குளம், நம்புக்குறிச்சி, சிறுகளப்பூர், வரகுப்பை, மேலரசூர் மற்றும் என்.சங்கேந்தி ஊராட்சிகளிலுள்ள கிராம சேவை மையங்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் சென்று பாரவையிட்டு. அங்குள்ள உற்பத்தியாளர் குழு உறுப்பினர்களை சந்தித்து, கலந்துரையாடினார்.
விவசாயப் பணிகள் இல்லாத சமயங்களில் விவசாயம் அல்லாத பணிகளான பேப்பர் பிளேட், பேப்பர் கப். ஆடு, மாடு வளர்த்தல், தையல், சணல் பைகள், பாக்குமட்டை ஆகிய பணிகளில் ஈடுபட்டு, அதனை தாங்களே சந்தைப்படுத்த வேண்டும். உரிய பயிற்சிகள் மூலம் இதனை மேற்கொண்டு, பொருளாதார முன்னேற்றம் அடைய வேண்டும் அன தெரிவித்தார். முன்னதாக, புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம், நெய்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் சென்று பள்ளி வளாகம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை பார்வையிட்டு, வகுப்பறைக்குச் சென்று கல்வி கற்பிக்கும் முறைகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்து, பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
இந்நிகழ்வுகளில் புள்ளம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன். ராஜேந்திரன், ஒன்றியக்குழு தலைவர் ரசியாகோல்டன் ராஜேந்திரன். உதவிப் பொறியாளர்கள் ரங்கநாதன், விமஸ்ராஜ் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.