ரூ.1.62 கோடி வாடகை பாக்கி - கடைகள் மூடல் - அதிகாரிகளுடன் வியாபாரிகள் மோதல்

ரூ.1.62 கோடி வாடகை பாக்கி - கடைகள் மூடல் - அதிகாரிகளுடன் வியாபாரிகள் மோதல்

திருச்சி புதிதாக கட்டப்பட்ட சத்திரம் பேருந்து நிலையத்திற்குள் சுமார் 35க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இந்த கடைகளில் கடந்த 18 மாதங்களாக சுமார் ஒரு கோடியே 62 லட்சத்திற்கும் மேல் ஒரு சில கடைகளில் வாடகை உள்ளது.

இந்த வாடகை பாக்கி தராத கடைகளை பூட்டவும் பேருந்து நிலையத்திற்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் இன்று காலை மாநகராட்சி ஆணையர் உத்தரவின்பெயரில் ஸ்ரீரங்கம் கோட்டத்தில் உள்ள அதிகாரிகள் தலைமையில் கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் பெரியசாமி தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதில், மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் உதவி செயற்பொறியாளர். கிருஷ்ணமூர்த்தி, இளநிலை பொறியாளர்கள் மதன்குமார், ராஜேந்திரன், கணேஷ்பாபு மற்றும் ஸ்ரீரங்கம் கோட்ட வருவாய் உதவி ஆய்வாளர் குமரேஷ் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் ஈடுபட்டனர்.

அப்போது வாடகை பாக்கி செலுத்தாத 20 கடைகளை அதிகாரிகள் பூட்டினர். மேலும் பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள சாலையில் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த 150 கடைகள் முன்பு உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அதிரடியாக அகற்றினர். அப்போது கடை உரிமையாளர்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் சத்திரம் பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision