திருச்சியில் முழு ஊரடங்கை மீறி இயக்கிய 3 ஆம்னி பேருந்துக்கு அபராதம்

திருச்சியில் முழு ஊரடங்கை மீறி இயக்கிய 3 ஆம்னி பேருந்துக்கு அபராதம்

கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் திருச்சி மாநகர போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று முழு ஊரடங்கில் திருச்சி மாநகரில் 8 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன கண்காணிப்பு செய்யப்பட்டது.

அப்போது மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் காவல்துயினர் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். ஜங்சன் பகுதியில் வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்தை நிறுத்தி சோதனை மற்றும் விசாரணை நடத்தியதில் அந்த ஆம்னி பேருந்து தஞ்சையிலிருந்து பெங்களூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலைக்கு ஊழியர்களை அழைத்துச் சென்றது தெரியவந்தது.

பின்னர் அந்த ஆம்னி பேருந்து ஓட்டுநருக்கு 10 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதேபோல் திருச்சி ஒத்தக்கடை சிக்னல் அருகே கண்டோன்மென்ட் வழியாகச் சென்ற இரண்டு ஆம்னி பேருந்துகளை தடுத்து நிறுத்தி தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn