அனுமதியின்றி ஜல்லிக்கட்டு போட்டி 6 ஜல்லிகட்டு மாடுகள், 3 மினி லாரி 2 பைக் பறிமுதல்

அனுமதியின்றி ஜல்லிக்கட்டு போட்டி 6 ஜல்லிகட்டு மாடுகள், 3 மினி லாரி 2 பைக் பறிமுதல்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடியில் அரசு அனுமதியின்றி ஜல்லிக்கட்டு போட்டியை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் துவாக்குடி சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த சுமார் 100 மாடுகள்  ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டதோடு மாடுபிடி வீரர்களும் அந்த போட்டியில் கலந்துகொண்டனர்.

உடனடியாக அவர்களை அங்கிருந்து துவாக்குடி போலீசார் விரட்டியடித்தனர். பின்னர் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்வதற்காக வந்த 6 ஜல்லிக்கட்டு மாடுகள் மற்றும் 3 மினி லாரிகள் மற்றும் 2 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து துவாக்குடி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

இச்சம்பவம் குறித்து பிடிபட்ட மாட்டின் உரிமையாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில்... விவசாயத்தை தொடங்குவதற்காக நல் ஏறு கட்டப்பட்டதாகும். அதன் தொடர்ச்சியாக எருதுகள் விடப்பட்டதாக கூறியுள்ளனர். ஆனால் அனுமதி இன்றி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தியது தவறு என்று எழுதி வாங்கிக்கொண்டு மாடுகளை மட்டும் அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து துவாக்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF