திருச்சியில் மேள தாளங்களுடன் கூடிய கூட்டம் நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்

திருச்சியில்  மேள தாளங்களுடன்  கூடிய கூட்டம் நடவடிக்கை  எடுப்பார்களா அதிகாரிகள்

திருச்சி திருச்சி மேலப்புதூர் பாலம் அருகே பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவரின் இரண்டு சக்கர வாகன ஷோரூம் திறப்பு விழா இன்று நடைபெற்றது .இந்நிகழ்ச்சியில் பங்கேற்க பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா திருச்சி மாவட்ட தலைவர் ராஜேஷ் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக வருகை புரிந்தனர். அவரை வரவேற்பதற்காக செண்டை மேளம் மற்றும் டிரம்ஸ் வைத்து வரவேற்பு ஏற்பாடுகள் தடபுடலாக செய்யப்பட்டு இருந்தது.

அதிலும் முக்கியமாக தனிமனித இடைவெளி இல்லாமல் அதிகமானோர் கூடி முககவசம் அணியாமல் இருந்ததை  காட்சிகளில் காணமுடிந்தது .தொடர்ந்து கோவிட் தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் மக்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் தனி மனித இடைவெளி கடைபிடிக்க வேண்டும் .பெரிய அளவில் கூட்டம் கூட கூடாது, நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

அதையும் தாண்டி காற்றில் பறக்கவிட்டு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முக்கியமாக தற்போது பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்ற அறிவிப்பும் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்நிகழ்ச்சி  நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வில் முக்கியமாக அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு உள்ளது பொதுமக்களிடையே மிகுந்த கோபத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF