7 நாட்களுக்கு இலவச  அலுவலக இடமளிக்கும் திருச்சி (Trichy Coworks)நிறுவனம்  

7 நாட்களுக்கு இலவச  அலுவலக இடமளிக்கும் திருச்சி (Trichy Coworks)நிறுவனம்  

 புதிதாக ஒருவர் தொழில் தொடங்கும் போது அந்த அலுவலக கட்டமைப்பிற்கு அதிக அளவிலான முதலீடு  செய்ய வேண்டி உள்ளது.  அதனை பராமரிக்கவும் தனித்துவமாக முதலீடு செய்ய வேண்டியிருக்கும் இவை அனைத்திற்கும் ஒரு தீர்வாக புதிதாக ஒரு முயற்சியை தொடங்கியுள்ளது Trichy Coworks. 
 ஒரு அலுவலகத்தில்    பணியாற்றும் இடம் அல்லது ஒரு அலுவலக அறை என்று தனித்தனியாக  வெவ்வேறு அலுவலகத்தில் பணியாற்றுபவர்களும்  அலுவலக இடத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

சென்னை பெங்களூர் போன்ற இடங்களில் உள்ளது போலவே தற்போது திருச்சியில் 2 இடங்களில் coworks  நிறுவனம் செயல்பட்டு வருகிறது.இதில் தில்லைநகரில் உள்ள திருச்சி கோவொர்க்ஸ்  நிறுவனம்  அடுத்த 7 நாட்களுக்குள் தங்கள் அலுவலகத்தை பயன்படுத்தி பிடித்திருந்தால் தொடர்ந்து பணியாற்றுவதற்கான ஒரு வாய்ப்பினை அளித்துள்ளனர்.இதுகுறித்து பேசிய திருச்சி கோவொர்க்ஸ் நிறுவனத்தின் வணிக மேம்பாட்டு நிர்வாகி மனோஜ் Coworks நிறுவத்தின் சறப்பம்சங்களை விளக்கியுள்ளார்.

Single seaters,ஒற்றை இருக்கை திட்டம் உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வலையமைப்பை விரிவாக்க உதவும்.
 புதிய தொழில்முறை பின்னணி கொண்ட புதிய  நபர்களுடன் இணைக்கப்படுவதற்கும் ஒத்துழைப்பதற்கும் உங்களுக்கு வாய்ப்பளிக்கிறது.  பணிச்சூழலியல்  மற்றும் அத்தியாவசியமான இட வசதிகளுடன் நிறுவப்பட்ட தனிப்பட்ட பணிநிலையம்.  
இந்த பணி மேசைகள் உங்கள் குறுகிய கால மற்றும் நீண்ட கால அலுவலக இட தேவையை பூர்த்தி செய்ய  அலுவலக அமைப்பு தயாராக உள்ளன.


Private office space ,தனிஅலுவலக பணியிடங்கள்.  உங்கள் மற்றும் உங்கள் குழு உறுப்பினர்களுக்கு அதிக தனியுரிமை மற்றும் அர்ப்பணிப்புள்ள பணிச்சூழலை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.  எங்கள் வாடிக்கையாளர்களின் நீண்ட கால அலுவலக இடதேவையை பூர்த்தி செய்ய தனியார் அலுவலக பணியிடத் திட்டம் மிகவும் பொருத்தமானது.

Meeting room,ப்ரொஜெக்டர் ,ஒயிட் போர்டு மார்கர்ஸ்  போன்ற அத்தியாவசிய உபகரணங்களுடன் கூடிய மீட்டிங்  அறை. உங்கள் வணிக கூட்டங்கள்  கருத்தரங்கை நீங்கள் நடத்தும்போது இந்த இடம் மிகவும் தனியுரிமையை வழங்குகிறது.
Traing hall,
பயிற்சி அறை என்பது தங்களுடைய  அலுவலக பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கவும் வகுப்புகள் நடத்தவும் ஒரு பிரதேசமாக உதவும் விதத்தில் தனி தனி இருக்கைகளோடு உருவாக்கப்பட்டுள்ளது.

இன்றைக்கு கொரோனா காலகட்டம் என்பதால் தனியாக தொழில் தொடங்குவதற்காக கிட்டத்தட்ட 10 மாத காலவாடகையை  அட்வான்ஸ் தொகையாக செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் இதுபோன்ற எவ்வித பிரச்சினைகளும் இல்லாமல்  தயார் நிலையில் இருக்கும் இதுபோன்ற அலுவலகங்களை பயன்படுத்திக்கொண்டு முன்னேறுவதற்கான ஒரு புது முயற்சியை மேற்கொண்டு உள்ளோம்.அதேசமயம் வீட்டிலிருந்தே பணியாற்றுபவர்களுக்கு பணி சூழல் உருவாக்குவது மிக கடினம் அவர்களுக்கும் பிரத்தியேகமான முறையில் பணியாற்றுவதற்கான அமைப்பையும் ஏற்படுத்தி உள்ளோம் என்கிறார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF