நிறுவனங்களுக்கும்,ஊழியர்களுக்கும் பாலமாகவும், நடுநிலையாகவும் செயல்படுவதே மனிதவளத்துறை - HR DAY SPECIAL !!!

நிறுவனங்களுக்கும்,ஊழியர்களுக்கும் பாலமாகவும், நடுநிலையாகவும் செயல்படுவதே மனிதவளத்துறை - HR DAY SPECIAL !!!

ஒருநிறுவனத்தை
மேம்படுத்துவதில் அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு .குறிப்பாக அந்நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்கள் முதல் முதலாளி வரை அனைவருக்குமே மிக முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.


 முதலாளி மற்றும் பணி ஆட்கள் இடையே ஒரு பாலமாக செயல்படுபவர்கள் மனிதவள பணியாளர்கர் (HUMAN RESOURCES-HR)  ஒரு வலுவான அமைப்பை உருவாக்குவதில் மனிதவள பணியாளர்களின் பங்கை கொண்டாடுவதற்காக சர்வதேச மனிதவள தினமாக மே 20ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. 
மனிதவளம் என்பது ஒரு நிறுவனத்தின் ஒட்டுமொத்த பணியாளர்களில்  ஒவ்வொரு நபரின் திறன்களையும் திறமைகளையும் நிறுவனத்திற்கு வழங்குவதன் மூலம் வெற்றிபெற செய்வது.
 நிறுவனத்தை மேம் படுத்துவதற்கான முயற்சியில் எந்த ஒரு நபரும் தங்கள் உழைப்பு அறிவு மற்றும் இழப்பீடுகள் நேரத்தை வர்த்தகம் செய்ய தயாராக இருப்பது ஒரு மனித வளமாகும்.
மிகவும் சவாலான இந்த பணியை மேற்கொள்ளும் சில பணியாளர்கள் இந்த பணியினை குறித்தும் அவர்களுடைய தனிப்பட்ட அனுபவங்கள் குறித்து பகிர்ந்து உள்ளனர்.



தான்யா

VDart

VDart நிறுவனத்தில் பணிபுரியும் தான்யா பேசும் போது....பணியாட்களின்  குறைகளை கேட்டறிவதும்அதனால் நிறுவனத்திற்கும் எவ்வகையிலும் பாதிக்காமல் பார்த்துக்கொள்வதே  மிக முக்கிய பொறுப்பாக  நான் பார்க்கிறேன்.

 குறிப்பாக  வேலையாட்களின் பணிச்சுமை அவர்களுடைய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வது நம்முடைய மிக முக்கிய கடமையாக நான் கருதுகிறேன். 
பொதுவாகவே  தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் இப் பணியில் இருப்பவர்கள் கடுமையாகவே இருப்பார்கள் என்ற பிம்பம் காண்பிப்பதால் மக்களும் அதை நம்புகின்றனர்.ஆனால்  எங்கள் நிறுவனத்தில்  ஒரு குடும்பமாக ஒரு உறவாக நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
என்னைப் பொறுத்தவரை அவர்கள் என்னிடம்  அவர்களுடைய குறைகளையோ அல்லது அவர்களுடைய எதிர்பார்ப்பு  கூறும்போது  சரியான முறையில் செய்து முடிக்க முடிந்த அளவிற்கு நான் முயற்சி செய்து கொண்டிருப்பேன்.  இந்த பணி என்பது மக்களோடு நேரடியாக தொடர்பு கொள்வது அவர்களுடைய வளர்ச்சிதான் நிறுவனங்களின் வளர்ச்சி அதனை சரியான முறையில் கையாளுவதற்கு நாங்கள் ஒரு பாலமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். இப்பணி  அதிக மக்களுக்கு  ஆலோசனை சொல்லும் ஒரு நபராகவும் நம்மை நாமே மேம்படுத்திக் கொள்ளவும் உதவுகிறது என்கிறார்.

வீரமணிகண்டன்

KMC மருத்துவமனை

காவேரி மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் வீரமணிகண்டன் குறிப்பிடும் போது
என்னுடைய கல்லூரி காலத்தின் போதெல்லாம் இந்த பணி பற்றிய எந்தவித தெளிவும்  இல்லாமல் இருந்தது.
ஆனால் என்னுடைய முதுகலை படிப்பு முடித்த பின்பு நான்  என்னுடைய இன்டர்ன்ஷிப்பை ஹூண்டாய்  நிறுவனத்தின் தொடர்ந்த போது அங்கிருந்த HR  வேலையின் மீது கிடைத்த தெளிவும் அனுபவமும்   நானும் HR ஆக வேண்டும் என்று விரும்பி கிட்டத்தட்ட ஓராண்டு காலம் வேலை  தேடினேன்.
 இதற்கிடையில் சென்னையில்  2010ல்  25 ஆயிரம் ரூபாய்க்கு சம்பளத்தில் பணியாற்றியப்போது திருச்சியில் HR பணிக்கு எட்டாயிரம் ரூபாய்க்கு கூப்பிட்ட போதுஇந்த பணியின்  மீதிருந்த ஆர்வத்தால் சம்பளத்துக்கு ஒப்புக்கொண்டு பணியாற்றத் தொடங்கினேன்.
நம்மை நம்பி அவர்களுடைய குறைகளையும் அவர்களுடைய எதிர்பார்ப்புகளையும் கூறும் பொழுது அதனை நிவர்த்தி செய்ய வேண்டிய இடத்தில் இருக்கின்ற நாம் அதனை சரியான முறையில் கையாள வேண்டும் இந்த பணியினை பொறுத்தவரை மிகவும் சவாலான ஒன்று யாருக்கும் எந்த நேரத்திலும் நடு நிலையாக இருப்பது மிக முக்கியமான ஒன்று எல்லா நேரங்களிலும் ஒருவன் எல்லோருக்கும் நல்லவராக இருக்க இயலாது .ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் நிறுவனத்திற்கும் ஊழியர்களுக்கும் இருவருக்கும் சிறந்த முறையில் நம்முடைய பங்களிப்பை அளிக்க வேண்டும் என்பதே அதனை சரியான முறையில் கையாளும் பொழுது நம் பணிக்கான மதிப்பு கூடுகிறது.
 சமூகத்தில் இத்துறை பணியின் மீது ஒரு பிம்பம் இருக்கின்றது. நிறுவனத்தில் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அல்லது ஏதேனும்  ஊக்கத் தொகை வழங்கப்பட்டால்  நிறுவனத்தால் வழங்கப்பட்டது என்பார்கள். ஆனால் அவர்களுடைய ஊதியக் குறைப்பு அல்லது வேறு விதமான பிரச்சினைகள் என்றால் அதே துறையில் பணியில் இருப்பவர்களை சாடுவார்கள்.
 இதை அனைத்தையும் கடந்து அவர்களின் நலனுக்காக உழைப்பவர்கள் நாங்கள்.
 திருச்சி, சென்னை,அயல் நாடுகளிலும் HR ஆக பணிபுரிந்து விட்டு தற்போது நான்கு ஆண்டுகளாக காவேரி மருத்துவமனையில் பணியாற்றி வருகிறேன்.இப்பணியின்  சிறப்பு யாதெனில் ஒரு பணியாட்களின் தேவையை சக பணியாளர்களை செய்வதற்கு முன்பாகவே அவர்களுடைய தேவைகளையும் திறமைகளையும் நிறுவனத்திற்கு எடுத்துக்காட்டி அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதும் அதே சமயத்தில் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் உழைப்பையும் பங்களிப்பையும் அளிப்பதே 
 என்கிறார்.

மனோஜ் கிங்ஸ்லி

MST Solutions

எட்டாண்டு காலமாக
 MST Solutionsல் HR ஆக தான் பணிபுரிந்து வருகிறேன்.  எனக்கு மிகவும் பிடித்தமான பணி 
பிறருக்கு வாய்ப்புகளை வழங்கும் போது நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சி அலாதியானது அதேபோன்று  அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யும் போதும் அதனால்  நிறுவனத்தின் வளர்ச்சிக்கு கிடைக்கும் ஒவ்வொரு வெற்றியும் மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் எனவே பணியை நான் விரும்பி செய்து கொண்டிருக்கிறேன். எப்போதுமே பொதுவாக இப்பணியில் இருப்பவர்கள் நிறுவனங்களின்  சாதகமாகவே தங்களுடைய செயல்பாடுகளை செய்வார்கள் என்ற ஒரு பிம்பம் இருக்கும் ஆனால் என்னை பொறுத்தவரை அதனை உடைத்து பணியாளர்களோடு பணியாளர்களாக அவர்களுடைய குறை நிறைகளை கேட்டறிந்து அவர்களுடைய உழைப்பு தான் நிறுவனத்தின் வெற்றி எனவே அவர்களுக்காக  இணைந்து செயல்பட்டு இவ்வுலகத்தில் இருக்கும் இந்த மாயபிம்பத்தை   உடைத்து பணியாளர்களுடன் நேரடியாக அவர்களோடு இணைந்து செயல்பட வேண்டும் என்று நினைத்து ஒவ்வொரு நாளும் பணியாற்றி வருகிறேன் என்கிறார். 


SUN Business Solutions ல் பணியாற்றி வரும் மனோகர்...


பத்தாண்டு காலம் இந்த துறையில்  பணிபுரிந்து வருகிறேன். பொதுவாக எனக்கு பணியின் மீது அதிக ஈர்ப்பும் ஆர்வமும் இருந்ததாலேயே இதனை தேர்வு செய்தேன் . நேரடியாக ஒருவரோடு பழகும் போது அவர்களுடைய திறமைகளை வெளிக்கொணரும் போது  மகிழ்ச்சி கிடைக்கும் என்ற நம்பிக்கை கிடைத்தையே  இதில் கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக பணியாற்றுவதற்கான மிக முக்கிய காரணமாக நான் கருதுவேன். எப்போதுமே நான் என்னை கடுமையானவராக காட்டிக்கொள்வது இல்லை. எப்பவும் முடிந்தவரை அவர்களுடன் நட்பு ரீதியாக பழகுவது.  ஆனால் இந்த சமூகத்தை பொறுத்தவரை இது போன்ற பதவிகளில் இருப்பவர்கள் கடுமையானவர்களாக இருப்பார்கள் என்ற பிம்பம் இருக்கும் ஒரு புறம் அது நன்மையும் கூட .ஒரு நிறுவனத்தை மேம்படுத்துவதற்கும் இதுபோன்ற பொறுப்புகளில் இருப்பவர்கள் மீது பணியாட்களுக்கு ஒருவித மரியாதையும் பயமும் இருத்தல் அவசியம். அதேசமயம் அவர்களோடு    நட்பாகவும் இருக்க வேண்டும் அவர்களுக்கு சரியான வழிகாட்டியாகவும் இருக்கவேண்டும் வழிகாட்டியாக இருப்பவர்கள் சில நேரங்களில் கடுமையாகவும் நடந்து கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும் . ஒரு நிறுவனத்திற்காக செயல்படும் பொழுது நிறைய கட்டுப்பாடுகளுக்கும் அவர்களுடைய எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வது நம்முடைய தலையாய கடமை அதே நேரத்தில் பணியாட்களின்  தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறோம் என்கிறார்.
 
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK