கொரோனாவில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது எப்படி - திருச்சி விஷன் முகநூல் பக்கத்தில் மருத்துவர் தங்கவேல் பங்கேற்கும் நேரலை.
கொரோனா நோய்த்தொற்று தமிழகத்தில் நாளுக்கு நாள் மிக வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக திருச்சியில் இது வரை இல்லாத அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இக்கொடிய நோயில் இருந்து மக்கள் தங்களையும் தங்களது குழந்தைகளையும் தற்காத்துக் கொள்ள பலரும் பலவிதமான அறிவுரைகளை வழங்கி வருகின்றனர். ஆனால் மருத்துவரின் நேரடி அறிவுரைக்கு ஈடு இணை ஏதும் இல்லை.
இதனை கருத்தில் கொண்டு, திருச்சி விஷன் குழு சார்பாக "கொரோனாவும் குழந்தைகள் நலனும்" என்கிற தலைப்பில் மருத்துவரை கொண்டு வரும் 21- ம் தேதி இரவு 9.30-10.30 மணி வரை முகநூல் நேரலையை ஏற்பாடு செய்துள்ளது. இதில் குழந்தைகள் நல மருத்துவர் தங்கவேல் பங்கேற்று உங்களது கேள்விகளுக்கு பதில் அளிக்க உள்ளார்.
குழந்தைகளை கொரோனா காலத்தில் எப்படி பாதுகாப்பது, குழந்தைகள் இருக்கும் வீடுகளில் எது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு விடையளிப்பார். இது போன்ற கேள்விகள் எதேணும் உங்களுக்கு இருந்தால் 9787283349 என்ற எண்ணிற்கு வரும் வெள்ளிக்கிழமைக்குள் வாட்ஸ்அப் வழியாக அனுப்பவும்.
சமூக நலனில் அக்கறை கொண்டு நாங்கள் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளோம். முழுவதுமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
www.facebook.com/trichyvisionn