திருச்சி மாவட்டத்தில் டிசம்பர் (2023) மாதத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் டிசம்பர் (2023) மாதத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் அறிவிப்பு

மேற்பார்வை பொறியாளர், திருச்சி மின்பகிர்மான வட்டம். பெருநகரம் / திருச்சி, பெருநகரம்/திருச்சி மின்பகிர்மான வட்டத்தைச் சார்ந்த கோட்ட அலுவலகங்களில் வரும் டிசம்பர் 20023 ஆம் மாதம் கீழ்க்கண்ட வேலை நாட்களில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகின்றது.

(1) முசிறி கோட்டம் : 01.12.2023 - (முதல் வெள்ளிக்கிழமை

(2) துறையூர் கோட்டம் : 05.12.2023 - (முதல் செவ்வாய்கிழமை) 

(3 ) திருவரங்கம் கோட்டம் : 08.12.2023 - (இரண்டாம் வெள்ளிக்கிழமை)

(4) இலால்குடி கோட்டம் : 12.12.2023 - (இரண்டாம் செவ்வாய்கிழமை)

(5) திருச்சி கிழக்கு கோட்டம் : 15.12.2023 - ( மூன்றாம் வெள்ளிக்கிழமை)

(6) திருச்சி நகரிய கோட்டம் : 19.12.2023 - (மூன்றாம் செவ்வாய்கிழமை)

(7) மணப்பாறை கோட்டம் : 26.12.2023 - (நான்காம் செவ்வாய்கிழமை)

எனவே வரும் டிசம்பர் 2023 ஆம் மாதத்தில் மேற்குறிப்பிட்டவாறு நடக்க உள்ள பொதுமக்கள் குறை தீர்க்கும் நாட்களில் மின்நுகர்வோர்கள் தங்கள் குறைகளை நேரில் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளுமாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision