திருச்சி தேசியக் தொழில்நுட்ப கல்லூரி "Rolling Reels Film Festival" 2021-நவம்பர் 6ஆம் தேதி வரை முன்பதிவு
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் Festember ரோலிங் ரீல்ஸ் பிலிம் பெஸ்டிவல் கலாச்சார விழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும்.
இவ்விழா 1975ஆம் ஆண்டு கல்லூரி மாணவர்களால் நிறுவப்பட்ட விழாவாகும்.தற்போது தென்னிந்தியாவின் மிகப்பெரிய திருவிழாக்களில் ஒன்றாக மாறியுள்ளது.
நான்கு நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் திறமையான இளம் திரைப்பட தயாரிப்பாளர்கள் இளம் திறமைகள் மற்றும் திரைப்பட ஆர்வலர் ஆகியோருக்கு இடையே உள்ள இடைவெளிகளை குறித்து 2015இல் ரோலிங் ரயில் சர்வதேச திரைப்பட விழாவை தொடங்கி உள்ளனர்.
ரோலிங் ரீல்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இளம் திரைப்பட தயாரிப்பாளர்கள் தங்கள் திறமையை வெளிக்காட்டவும் திரையுலகின் சில பிரபலங்களுடன் தொடர்பு கொள்ளவும் இந்த நிகழ்வின் சிறப்பு அம்சம் திரைப்படம் உருவாக்கும் போட்டியாகும்.
இப்போட்டியில் பங்கேற்கும் பங்கேற்பாளர்களின் திரைப்படத்தின் தரம் மற்றும் அவர்களின் படைப்பாற்றல் திறன் ஆகியவற்றின் பொறுத்து நடுவர்களின் தேர்வுசெய்யும் திரைப்படத்திற்கு RRIFF கோப்பை வழங்கப்படும்.
சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து திரைப்படங்களும் நடுவர்கள் குழுவால் பரிசீலனை செய்யப்பட்டு தேர்வு செய்யப்படும் திரைப்படங்கள் திரைப்பட விழா திருவிழா திரையிடப்படும்.
ரோலிங் ரீல்ஸ் பிலிம் பெஸ்டிவல் 2021போட்டியில் வெற்றிபெறும் போட்டியாளருக்கு 60 ஆயிரம் பரிசு தொகை வழங்கப்படும்.இப்போட்டியில் பங்கேற்பதற்கு பதிவு செய்ய நவம்பர் 6ஆம் தேதி கடைசி நாளாகும்.
நிகழ்ச்சியில் திரைப்பட தயாரிப்பு மற்றும் காட்சிகளை கொண்டாடும் நிகழ்வாக திரைப்பட விழாவில் பயிலரங்கள் மற்றும் குழு விவாதங்கள் நடைபெறும்.
சர்வதேச திரைப்பட விழா பார்வையாளர்களுக்கு ஒரு விருந்தாகவும் பங்கேற்பாளர்களுக்கு ஒரு துவக்க மேடையாகவும் அமையும்.