திருச்சியில் நாளை (11.09.2023) தமிழ் கனவு நிகழ்ச்சி

திருச்சியில் நாளை (11.09.2023) தமிழ் கனவு நிகழ்ச்சி

தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்பிற்கிணங்க கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும் தமிழ் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் மாபெரும் தமிழ் கனவு என்ற நிகழ்வு தமிழ்நாடு முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லூரிகளில் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அமைந்துள்ள தேசியக்கல்லூரியில் மாபெரும் தமிழ் கனவு என்ற நிகழ்வு (11.08.2023) அன்று காலை 9:00 மணியளவில் நடைபெற உள்ளது. 

இந்நிகழ்ச்சியில் தமிழ்ப் பெருமைகளைப் பறைச்சாற்றும் வகையிலும், அதேநேரம் தாங்கள் புலமை பெற்ற துறைச் சார்ந்தும அ பேருரை நிகழ்த்துவார்கள். தமிழ்நாட்டின் மிகச் சிறந்த ஆளுமைகள், பல்துறை நிபுணர்கள் ஆகியோரின் ஊக்கமிகு உரை மாணவர்களுக்கு உத்வேகம் அளிப்பதாகவும் அவர்களுக்குத் தமிழ் மரபின் பெருமிதத்தை உணர்த்துவதாகவும் அமையும் தேசியக்கல்லூரியில் நடைபெறும் மாபெரும் தமிழ் கனவு என்ற நிகழ்ச்சியில்தமிழ்நாடு நேற்று, இன்று, நாளை என்ற தலைப்பின் கீழ் சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே பரப்புரை ஆற்ற உள்ளார்கள். 

இந்நிகழ்வில் மாணவர்களுக்கு உதவும் வகையில் புத்தகக்காட்சி, ‘நான் முதல்வன்’, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, மாவட்டத் தொழில் மையம், தாட்கோ, வங்கிக் கடனுதவி ஆலோசனை, சுய உதவிக் குழுவினரின் தயாரிப்புகள் போன்ற அரங்குகள் அமைக்கப்படும். நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு ‘உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி’, ’தமிழ்ப் பெருமிதம்’ ஆகிய இரு கையேடுகள் வழங்கப்படவுள்ளது. எனவே கல்லூரி மாணவ - மாணவியா ரகள் அனைவரும் தவறாது இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision