தேசிய மனிதவள மேம்பாட்டு திருச்சி பிரிவின் சார்பில் திறன் மேம்பாட்டுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி
ஒரு நிறுவனத்தை மேம்படுத்துவதில் அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு. குறிப்பாக பணிபுரியும் ஊழியர்கள் முதல் முதலாளி வரை அனைவருக்குமே மிக முக்கிய பங்கு உண்டு. முதலாளி மற்றும் பணி ஆட்கள் இடையே ஒரு பாலமாக செயல்படுபவர்கள் மனிதவள பணியாளர்கர் (HUMAN RESOURCES-HR) ஒரு வலுவான அமைப்பை உருவாக்குவதில் மனிதவள பணியாளர்களின் பங்கு அளப்பரியது.
மனிதவளம் என்பது ஒரு நிறுவனத்தின் ஒட்டுமொத்த பணியாளர்களில் ஒரு நபர் ஒவ்வொரு நபரின் திறன்களையும் திறமைகளையும் நிறுவனத்திற்கு வழங்குவதன் மூலம் வெற்றி பெற செய்வது. நிறுவனத்தை மேம்படுத்துவதற்கான முயற்சியில் எந்த ஒரு நபரும் தங்கள் உழைப்பு அறிவு மற்றும் நேரத்தை அர்பணிக்க தயாராக இருப்பதே ஒரு மனித வளமாகும். மிகவும் சவாலான பணி என்றே கூறலாம். இத்துறையில் உள்ள அனைவரையும் ஒருங்கிணைக்கும் ஒரு அமைப்பு தான் தேசிய மனித வள மேம்பாடு. தேசிய மனிதவள மேம்பாட்டுக் கூட்டமைப்பின் திருச்சி பிரிவில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் முதல் முயற்சியாக திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து நிறுவனத்தின் மனிதவளத் துறையில் பணியாற்றும் அனைவரையும் ஒன்றிணைத்து ஒரு நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்துள்ளனர்.
இது குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராகவும் தற்போது திருச்சி பிரிவின் தேசிய மனிதவள மேம்பாட்டு அமைப்பின் பொருளாளராக பொறுப்பேற்றுள்ள விஜிலா ஜாஸ்மின் கூறுகையில்.... நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவுவதோடு நிறுவனத்தில் பணியாற்றும் ஒவ்வொரு ஊழியர்களின் வளர்ச்சிக்கும் துணை நிற்பதில் மனிதவளத்துறையினர் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றனர். அப்படியிருக்கையில் பொருளாதார வகையிலும் சமூகம் சார்ந்த ஒருவர் நட்புறவை வளர்த்துக்கொள்வது தங்களுடைய தனித்திறன்களை பிறருக்கு தெரியப்படுத்துவது பிறரிடமிருந்து பலவற்றை கற்றுக் கொள்வது அவசியமானது.
திறமையும், தன்னுடையதிறமையை செயல்படுத்துவதற்கான ஆற்றலும் பெற்று அதனை சரியான நேரத்தில் சவாலான சூழலை சமாளிக்க தகுதியுடையவர்களாக தங்களை வெளிப்படுத்தும் முக்கியமானது. எனவே அந்த ஒரு வாய்ப்பை தேசிய மனித வளத்துறை மேம்பாட்டு திருச்சி பிரிவின் சார்பில் ஏற்படுத்திட வேண்டும் என்று முதல் பணியாக இதை ஏற்பாடு செய்துள்ளோம். இந்நிகழ்ச்சியில் திருச்சியில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் மனிதவளத்துறை பணியாளர்களும் முதுகலை மனிதவளத் துறை சார்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு தங்களுடைய திறனை வளர்த்துக் கொள்ளலாம்.
இந்தப் பேரிடர் கால கட்டங்களில் முன் களப்பணியாளர்கள் எப்படி தங்களுடைய பணியில் இடைவிடாது சமூகத்தினருக்கு சேவையாற்றுகிறார்களோ அதே போன்று மனிதவளத்துறை பணியாளர்களும் தங்களுடைய நிறுவனத்திற்காக சமூகத்திற்காகவும் தங்களுடைய பணியை அயராது செய்து கொண்டிருக்கின்றனர். எனவே அவர்களுக்கு ஓர் ஊக்கமளிக்கும் வகையில் இந்நிகழ்ச்சி அமையும் என்றார். புதிதாக பொறுப்பேற்றுள்ள ஒவ்வொருவருமே தங்களுடைய பணியை சரியாக செய்வதற்கும் இன்னும் முனைப்பாக பல திட்டங்களை விரைந்து செயல்படுத்தி மனிதவளத்துறையில் திருச்சியை பெருமை சேர்ப்பதற்கான எல்லா வகையான திட்டங்களையும் செயல்படுத்த தயார் நிலையில் இருக்கின்றோம் என தெரிவித்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn