தேசிய வாக்காளர்தின விழிப்புணர்வு போட்டிகளில் பங்கேற்க கால அவகாசம் நீட்டிப்பு -மாவட்ட ஆட்சியர் சிவராசு அறிவிப்பு

தேசிய வாக்காளர்தின விழிப்புணர்வு போட்டிகளில் பங்கேற்க கால அவகாசம் நீட்டிப்பு -மாவட்ட ஆட்சியர் சிவராசு அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு போட்டிகளில் பங்கேற்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சிவராசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது ,

இந்திய தோதல் ஆணையமானது ஒவ்வொறு வாக்கின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக 2022-ஆம் ஆண்டு தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு என் வாக்கு எனது எதிர்காலம் - ஒரு வாக்கின் வலிமை என்ற கருப்பொருளை மைய்யமாக கொண்டு தேசிய அளவில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகள் - 2022 அனைத்து தரப்பு மக்களும் மற்றும் அனைத்து வயதினரும் பங்கு பெறும் வகையில் https://voterawarenesscontest.in/

என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் நடத்தி வருகிறது. 

 இதில் தேசிய அளவில் வினாடி வினா, பாட்டுப்போட்டி, காணொலி தயாரித்தல், சுவரொட்டி, விளம்பர படம் வடிவமைப்பு மற்றும் வாசகம் எழுதுதல் போட்டி ஆகிய 5 தலைப்புகளில் போட்டிகள் நடந்து வருகிறது. இந்த போட்டிகளில், அமெச்சூர் போட்டியாளர், தொழில்முறை போட்டியாளர் மற்றும் நிறுவனம் சார்ந்த போட்டியாளர் ஆகிய மூன்று பிரிவுகளில் அனைத்து வயதினரும் பங்கேற்கலாம். பள்ளி மற்றும் கல்லூரியை சார்ந்த மாணவ, மாணவிகள் நிறுவனம் சார்ந்த போட்டியாளர்கள் என்ற பிரிவின் கீழ் பங்கேற்கலாம்.

பாட்டுப் போட்டி, காணொலிக் காட்சி உருவாக்கும் போட்டி மற்றும் விளம்பரப் படம் வடிவமைப்புபோட்டிஆகியவை நிறுவனம் சார்ந்த நபர்கள், தொழில் சார்ந்தவர் மற்றும் தொழில் சாராதவர் ஆகிய மூன்று பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டு உள்ளன. 

இந்த போட்டிகளுக்கான கால அவகாசம் வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. எனவே போட்டியில் பங்கேற்பவர்கள் அனைத்து பதிவுகளையும் பங்கேற்பாளர்களின் விவரங்களுடன் இணைத்து, வருகிற 31-ந் தேதிக்குள் voter-contest@eci.gov.in

என்ற மின்னஞ்சல் முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். 

 இந்த போட்டிகளில், பங்குபெற்று வெற்றிபெறும் நபர்களுக்கு ரூ.3000/- முதல் ரூ.2,00,000/- வரை பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். இப்போட்டிகளில் தனியார் / அரசு பள்ளிகள் கல்லூரிகள், பல்கலைகழகங்களில் பயின்று வரும் மணவ மாணவிகளை ஊக்குவித்து அவர்களை பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள் கலந்துக்கொள்ள வைக்க வேண்டும். இதேபோல் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியகள், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், தெழில் முனைவோர்கள் மற்றும் இதர நிறுவனங்களில் பணிபுரியும் காழியர்கள், பொதுமக்கள் என அனைத்து வயதினரும் மேற்படி போட்டிகளில் பங்குபெறுமாறு தெரிவிக்கப்டுகிறது. போட்டியில் பங்குபெற விரும்புவோர் தேர்தல் ஆணையத்தின் இணையதளம்:

voter-contest@eci.gov.inஎன்ற மின்னஞ்சல் முகவரியில் 31.03.2022-க்குள் விண்ணப்பித்திட வேண்டும்.

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் இந்த போட்டிகளில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK

#டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.co/nepIqeLanO