திருச்சி அருகே தேர் சக்கரத்தில் சிக்கிய முதியவர்
திருச்சி மாவட்டம், லால்குடியில் அமைந்துள்ள அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் கோயில் பங்குனித் தேரோட்டம் நடைபெற்றது. இதில் இரண்டு பொக்லின் இயந்திரம் உதவியுடன் லால்குடி எம்எல்ஏ சவுந்தரபாண்டியன் லால்குடி நகராட்சி தலைவர் துரைமாணிக்கம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது தேர் சக்கரத்தில் சிக்கி முதியவர் கால் இரண்டும் நசுங்கி துண்டானது.
லால்குடி அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் கோயில் திருத்தவத்துறை என்னும் லால்குடியில் அமைந்துள்ளது. இக் கோயில் எழு முனிவர்களுக்கு அருள் செய்ததால் பெருமானுக்கு சப்தரிஷீஸ்வரர் என்று இக் தலத்திற்கு திருத்தவத்துறை என்று அழைக்கப்படுகிறது.
நிகழாண்டில் இத் தேரோட்ட விழா கடந்த 8 ம் தேதி தொடங்கி, தொடர்ந்து தினசரி காலை பல்லாக்கும்,இரவு அம்மன் பல்வேறு வாகனங்களில் புறப்பாடும் நடைபெற்றது. விழாவின் 9 ம் நாளான இன்று காலை 8.55 மணிக்கு திருத் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இத் தேரோட்டத்தில் 2 பொக்லின் இயந்திரம் உதவியுடன் லால்குடி எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் லால்குடி நகராட்சி தலைவர் துரைமாணிக்கம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இதில் சுவாமிகள் விநாயகர், சுப்ரமணியர் , சோமாஸ்கந்தர், பெருந்திரு பிராட்டியார், சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்கள் தனித் தனி தேரில் அமர்ந்திருந்த பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த 5 தேர்களும் மேலவீதி, வடக்கு வீதி, கீழ வீதி, தெற்கு வீதி ஆகிய வீதிகளில் வலம் வந்து தேர் நிலையை அடைந்தது.
விநாயகர் சிலை உடன் வலம் வந்த தேரை அதே பகுதியை சேர்ந்த கலியபெருமாள் என்ற 70 வயது முதியவர் வடம் பிடித்து இழுத்த போது கூட்ட நெரிசலில் தடுமாறி கீழே விழுந்த போது தேர் சக்கரம் முதியவரின் இரண்டு கால்கள் மீது ஏறி இறங்கி துண்டானது படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் போலீசாரின் பாதுகாப்பு குறைபாடுகள் இச்சம்பவம் நடைபெற்றது என பக்தர்கள் வேதனை அடைந்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK
#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO