திமுக - அதிமுக அண்ணன் தம்பி கட்சி - அமைச்சர் கே.என்.நேரு திருச்சியில் பேச்சு
திருச்சி மத்திய மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் திமுக முதன்மைச் செயலாளர் நேரு, தெற்கு மாவட்ட செயலாளரும் பள்ளி கல்வித் துறை அமைச்சருமான மகேஸ் , மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி உள்ளிட்ட கலந்து கொண்டுள்ளனர்.
இக்கூட்டத்தில் திமுக முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான நேரு பேசிய போது.... தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திருச்சி 4ம் தேதி வருவது குறித்து நாளை தான் முடிவு தெரியும். தமிழக கவர்னர் எதிர்க்கட்சி போல செயல்படுகிறார். சின்ன விஷயத்தை ஊதி பெரிதாக்கி காட்டுகிறார்கள் பாஜகவினர். வெட்கத்தை விட்டு கூறுகிறேன் தமிழகத்தில் உள்ள அதிகாரிகள் மத்திய அரசுக்கு பயப்படுகிறார்கள் என குறிப்பிட்டார்.
அதிமுக பிளவு பட்டு கிடக்கிறது. அவர்களை சேர விடாமல் பாஜக செயல்பட்டு எதிர்க்கட்சியாக வருவதற்கு முயல்கிறது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். சட்டமன்றத் தேர்லில் டெல்டா மாவட்டங்களில் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றது போல் திருச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள மூன்று பாராளுமன்ற தொகுதிகளிலும் நிச்சயம் வெற்றி பெற்று விடுவோம் என்றார்.
இதனைத் தொடர்ந்து இறுதியாக கே.என்.நேரு பேசுகையில்..... எந்த கட்சியில் இருந்து வந்தாலும் பாஜகவில் பெரிய பதவிகளை கொடுக்கிறார்கள். பிஜேபியை இரண்டாவது இடத்திற்கு கொண்டுவர கூடாது. அதிமுகவை இரண்டு, மூன்று பிரிவுகளாக பிரித்து தங்களை வலுப்படுத்திக் கொள்கிறார்கள் பாஜக. அதிமுக, திமுக அண்ணன், தம்பி கட்சி இதுவரை சந்தித்து தேர்தல்கள் வேறு.
இந்த முறை சந்திக்கும் தேர்தல் சகல அதிகாரங்களையும் படைத்தவர்களை எதிர்த்து நின்று போட்டியிடும் தேர்தல். பூத் கமிட்டி அமைத்து பாராளுமன்றத் தேர்தலில் நாம் வெற்றி பெற்று நாம் கட்சி மானத்தை காப்பாற்ற வேண்டும் என தெரிவித்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO