கள்ளச்சாராயம் தயாரிக்க வைத்திருந்த 165 லிட்டர் ஊறல். 2 பெண்கள் கைது.

கள்ளச்சாராயம் தயாரிக்க வைத்திருந்த 165 லிட்டர் ஊறல். 2 பெண்கள் கைது.

கொரோனா தொற்று இரண்டாவது அலை காரணமாக தமிழகத்தில் இரண்டு வாரங்களுக்கு சில தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதில் வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் மது கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனைத் தொடர்ந்து கடந்த 24ஆம் தேதி முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் மதுக்கடைகள் மூடப்பட்டதால் மது பிரியர்கள் மதுபானம் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.

ஆனால் திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சட்டவிரோத மதுவிற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த ஊரடங்கை பயன்படுத்தி அதிக விலைக்கு மதுபானங்களை சட்டவிரோதமாக விற்பவர்களை காவல்துறையினர் கண்டுபிடித்து கைது செய்து வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் கள்ளச்சாராயம் தயாரிப்பதாக எடமலைப்பட்டிப்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் சுதா தலைமையில் ராம்ஜி நகர் பகுதியில் சோதனை நடத்திய போலீசார் மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் வெல்லம், கடுக்காய், வேப்பிலை ஆகியவை பயன்படுத்தி கள்ளச்சாரம் தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 165 லிட்டர் ஊறல் இருந்ததை கண்டுபிடித்தனர்.

பின்னர் கள்ளச்சாராயம் தயாரித்த விமலாதேவி மற்றும் ஜீவிதா ஆகிய இரு பெண்கள் கைது செய்த போலீசார் சாராய ஊறலை நிலத்தில் ஊற்றி அழித்தனர். மேலும் கைது செய்யப்பட்ட விமலா தேவி மீது ஏற்கனவே வழக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/I7AbpT9vFZAKjl63kSeYJx