சாலையோர மக்களுக்கு  இரவு உணவு வழங்கி வரும் தன்னார்வலர் சுபின்

சாலையோர மக்களுக்கு  இரவு உணவு வழங்கி வரும் தன்னார்வலர் சுபின்

திருச்சி திருவெறும்பூர் காட்டூர் பகுதியில் டென்டல் லேப் நடத்தி வரும் சுபின் திருவெறும்பூர் முதல் மன்னார்புரம் வரை இரவு நேரத்தில் சாலை ஓரத்தில் இருப்பவர்களுக்கு இரவு உணவு வழங்கி வருகிறார். இதுபற்றி சுபின் கூறுகையில், திருச்சி காட்டூர் பகுதியில் டென்டல் லேப் நடத்தி வருகிறேன்.

கிடைக்கும் வருமானத்தை வைத்து கொண்டு என்னால் முடிந்த அளவிற்கு சமூக மக்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்பதற்காக தினமும் 100 முதல் 150 நபர்களுக்கு இரவு உணவு வழங்கி வருகிறேன். காலையில் அதேபோன்று தேநீர் வழங்குவேன். மதிய நேரத்தில் உணவு தேவைப்படுபவர்கள் அழைத்தால் அவர்களுக்கு முடிந்த அளவு உணவு அளித்து உதவி வருகின்றோம். என்னுடன் இணைந்து என் நண்பர்கள் உதவிகளை எனக்கு செய்து வருகின்றனர்.

ஊரடங்கு தொடங்கிய நாளிலிருந்து தினம்தோறும் உணவு வழங்கி வருகிறோம். மக்களுக்காக தான் இந்த உதவிகள் அனைத்தும் செய்கிறோம் என்பதே மன நிறைவு. அதேபோன்று இரவு நேரத்தில் ரோந்து பணியில் இருக்கும் காவலர்களுக்கும் உணவு வழங்குவதற்கு மிகுந்த ஆர்வத்தோடு இருக்கின்றோம். அவர்களும் எவ்வித மறுப்பும் கூறாமல் புன்னகையோடு வாங்கி செல்லும் பொழுது மக்களுக்காக உழைப்பவர்களுக்கு ஒரு வேளை உணவாவது நம்மால் கொடுக்க முடிந்தது என்று நினைக்கும் பொழுது மனதிற்கு மகிழ்ச்சி தருகிறது.

வருமானம் குறைவாக இருந்தாலும் மக்களுக்காக சேவை செய்வதற்கு குடும்பத்தார்  தரும் ஊக்கமும் ஒத்துழைப்பும் என்னை இன்னும் பலருக்கு உதவிட உறுதுணையாய் இருக்கிறது என்கிறார் சுபின்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/I7AbpT9vFZAKjl63kSeYJx