திருச்சியில் வெள்ள நீர் சூழ்ந்த வீடுகளில் சிக்கிய 24 பேரை மீட்ட தீயணைப்பு துறை

திருச்சியில் வெள்ள நீர் சூழ்ந்த வீடுகளில் சிக்கிய 24 பேரை மீட்ட தீயணைப்பு துறை

திருச்சி குழுமணி சாலையில் லிங்க நகர் நகர் செல்வ நகர்  வெள்ள நீர சூழ்ந்த பகுதியில் 24 பேர் மீட்பு- தீயணைப்பு வீரர்கள் துரித பணி

கரூர் பகுதியில் பெய்த மழை மற்றும் குளித்தலை பகுதியில் ஏற்பட்ட வாய்க்கால் உடைப்பு இவற்றால் உய்யகொண்டான்  வாய்க்காலில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. திருச்சி குழுமாயி அம்மன் தொட்டி பாலம் அருகில் மழை நீர் ஆர்ப்பரித்து சென்றது.

 இதனால் கரையோர பகுதிகளாக உள்ள வயலூர் ரோடு கணபதி நகர் பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது .மேலும் அப்பகுதியில் வெள்ள நீரின் அளவு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதேபோல் திருச்சி குழுமணி சாலையில் உள்ள லிங்க நகர் ,செல்வ நகர் ,அரவிந்த் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் முழுவதும் மழை நீரால் சூழ்ந்து விட்டது .

அப்பகுதியில் உள்ளவர்கள் வீட்டை காலி செய்து வேறு பகுதிக்கு சென்று கொண்டிருக்கின்றனர். இது மட்டுமில்லாமல் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் உள்ளே புகுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. நான்கு சக்கர வாகனங்களை பாதுகாப்பாக எடுத்து வந்து பிரதான சாலையில் நிறுத்தி வைத்துள்ளனர். தொடர்ந்து அப்பகுதிகளில் வெள்ள நீர் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.


தொடர்ந்து இப்பகுதியில் வெள்ள நீரின் அளவு அதிகரித்துக்கொண்டே இருப்பதால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளே இருந்தனர். இந்நிலையில் வீடுகளுக்குள்ளேயே இருந்த முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் வெளியே வர முடியாமல் தவித்தனர்.

தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தவுடன் தீயணைப்பு துறையின் திருச்சி நிலைய மேலாளர் மெல்யுகிராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து 24 பேரை பத்திரமாக மீட்டு வந்தனர்.இவர்கள் நேரடியாக  முதியவர்கள் ,சிறுவர்கள் தோளில் தூக்கி வந்தோம். மீட்பு படகு மூலம் கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW 

டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.me/trichyvisionn