உலகப்புகழ் பெற்ற மணப்பாறை மாட்டுச்சந்தையில் நாட்டு குதிரை சந்தை தொடங்கியுள்ளது
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள மாட்டு சந்தை மிகவும் பிரபலமானது. இந்த சந்தை ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கி புதன்கிழமை மதியம் வரை நடைபெறும். இங்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்து தங்களுக்குத் தேவையான மாடுகளை வாங்கி செல்வார்கள்.
ஆனால் தற்போது கொரோனா காலம் என்பதால் வெளிமாநில வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் வருகை முற்றிலும் நின்றுவிட்டது. இந்த சந்தையில் ஒரு நாள் மட்டும் சுமார் 5 முதல் 8 கோடி வரை மட்டும் மாடுகள் விற்பனை நடைபெறும். இந்த நிலையில் மணப்பாறை மாட்டு சந்தை குதிரை விற்பனை நடைபெற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இதனால் சந்தையில் ஒப்பந்தக்காரர்கள் ஏற்பாட்டில் நேற்று மாலை முதல் மாட்டு சந்தையில் ஒரு பகுதியில் குதிரை சந்தையும் தொடங்கப்பட்டது. முதல் நாள் என்றாலும் கூட பல்வேறு மாவட்டங்களில் இந்த நாட்டு குதிரை, காட்பாடி என பல்வேறு வகையான குதிரைகள் விற்பனைக்கு வந்திருந்தது.
சிறிய குட்டி முதல் பெரிய அளவிலான குதிரைகள் விற்பனைக்கு வந்திருந்தது. இதுமட்டுமின்றி குதிரை வண்டி சவாரி செய்ய தேவையான பொருட்கள் உள்ளிட்டவைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn