பச்சமலை மங்கலம் அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்கு தொடர்ச்சி மலையான பச்சமலையில் அமைந்துள்ளது மங்கலம் அருவி. இப்பகுதி பொதுமக்களுக்கு இது ஒரு சிறிய குற்றாலம் போல் அமைந்துள்ளது. சீசன் காலங்களில் கொட்டும் அருவில் மக்கள் குளித்து மகிழ்கின்றனர். மேலும், சுற்றுலா பயணிகளும் குடும்பத்துடன் மகிழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை ஆரம்பிக்க உள்ள நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையில் அருவிக்கு நீர்வரத்து வரத் தொடங்கியது. இந்த நீர்வரத்து குறைந்த பட்சம் 100 நாட்களுக்கு வரும், தற்பொழுது பெய்த மழைக்கு சுற்றுலா பயணிகள் கடந்த இரண்டு தினங்களாக மங்கலம் அருவிக்கு தங்கள் வாகனங்களில் குடும்பத்துடன் சென்று குளித்து மகிழ்கின்றனர்.
இந்ததண்ணீர் பல்வேறு தாவரங்கள் வேர்களில் பட்டு வருவதால் மூலிகை தண்ணீராக கருதப்படுகிறது. அதனால் இந்த மூலிகை தண்ணீரில் குளிப்பதற்காக தமிழகம் முழுவதிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உப்பிலியபுரம் சோபனபுரம் வழியாக டாப் செங்காட்டுப்பட்டி சென்று மங்கலம் அருவிக்கு வருகிறார்கள். தமிழ்நாடு அரசு வனத்துறை திருச்சி சரகம் துறையூர் வன சரகம் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மங்கலம் அருவியில் தண்ணீர் வரத்து ஆரம்பித்து இருப்பதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் பெரிய மங்கலம் கிராமத்தில் இருந்து அருவி வரை செல்வதற்கு சுமார் ஒரு கிலோ மீட்டர் நீளமுள்ள புதிய தார் சாலை தமிழ்நாடு அரசு கெங்கவல்லி ஒன்றியம் ஆத்தி நாடு ஊராட்சி சார்பில் போடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் சென்று வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision