திருச்சியில் 15 மின்மோட்டார்கள் பறிமுதல்- ஆணையர் அதிரடி

திருச்சியில் 15 மின்மோட்டார்கள் பறிமுதல்- ஆணையர் அதிரடி

திருச்சிராப்பள்ளி மாநகர பகுதிகளில் வீட்டு குடிநீர் இணைப்புகளில் மின்மோட்டார்களை பொருத்தி தண்ணீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை.

 

மண்டலம் எண் 4, வார்டு எண்.56 ராம்ஜி நகர் பகுதியில் உதவி ஆணையர், உதவி செயற்பொறியாளர், இளநிலைப்பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் இன்று காலை (21.08.2024) குடிநீர் விநியோகம் குறித்து திடீர் ஆய்வு செய்தனர். 

 

இந்த ஆய்வின் போது இப்பகுதிகளில் 15 வீடுகளில் குடிநீர் விநியோக குழாயில், சட்டவிரோதமாக மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சியது கண்டறியப்பட்டதில், மின் மோட்டார்கள் 15 எண்ணிக்கை பறிமுதல் செய்யப்பட்டன. மாநகர பகுதிகளில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மின்மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுவதால் பொதுமக்கள் அனைவருக்கும் சீராக குடிநீர் கிடைக்கப் பெறுவதில்லை. தொடர்ந்து மின் மோட்டார்கள் மூலம் குடிநீர் உறிஞ்சினால் மின்மோட்டார் பறிமுதல் செய்யப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும் எனவும், குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்படும் என்றும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision