30 வகையான சட்னியுடன் ஏழு ரூபாய்க்கு இட்லி - ருசியான வீட்டு இரவு கடை

30 வகையான சட்னியுடன் ஏழு ரூபாய்க்கு இட்லி  - ருசியான  வீட்டு இரவு கடை
திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவரம்பூர் அருகே எழில் நகர் செல்லக்கூடிய பாதையில் இரவு நேரத்தில் டிபன் கடை வைத்து நடத்துபவர் முகமது ஷரீப் . 2019 ஆம் ஆண்டு பிஹெச்எல் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 2019 ம் ஆண்டு ஜனவரி மாதம் நினைவூட்டும் இட்லி கடை என்ற பெயரில் கடை திறந்தார். மூன்று மாதத்தில் கோவிட் தொற்று காரணமாக கடை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. மாலை ஆறு மணி முதல் 9 மணி வரை டிபன் கடை செயல்படும்.  இட்லி கடை எல்லா இடங்களிலும் வைத்திருப்பார்களே இந்த இட்லி கடைக்கு அப்படி என்ன பேமஸ் என்று கேட்டால் ஒரு இட்லி விலை 7 ரூபாய் அதற்குத் தரும் சட்டினி வகைகளோ 30.
 தன்னிடம் வரும் வாடிக்கையாளர்கள் அவர்களே தட்டு எடுத்துக்கொண்டு அவர்களுக்கு தேவையான உணவு ஆர்டர் செய்து அமர்ந்து சாப்பிட்டுக் கொள்ளலாம். சாதாரணமாக வீட்டில் ஒன்றிலிருந்து இரண்டு வகை சட்னி மட்டுமே சாப்பிட முடியும். ஆனால் இங்கே 30 வகையான சட்னி கொடுக்கப்படுகிறது. சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் ,வர மிளகாய், பூண்டு தக்காளி , பொட்டுகடலை,என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

இவர் பார்சல் யாருக்கும் அதிகமாக கொடுப்பதில்லை. குடும்பத்துடன் வந்து அமர்ந்து சாப்பிடுவதற்காகவே இந்த உணவகத்தை வைத்து நடத்தி வருகிறார். இந்த உணவகத்தை துவங்குவதற்கான காரணம் 45 ஆண்டுகளுக்கு முன்னதாக அவர் திண்டுக்கல்லில் காபி ஒன்றை குடித்துள்ளார். அதன் ருசி இன்னும் அவர் நாவிலிருந்து அகலவில்லை என குறிப்பிட்டு அதுபோன்ற ருசியை மக்களுக்கு தரவேண்டும் என்ற எண்ணத்தில் இந்த உணவகத்தை ஆரம்பித்ததாக பெருமைப்பட தெரிவித்தார்.
இவரது உணவகத்தில் 8 பெண்கள் மட்டுமே பணிபுரிகிறார்கள். பெண்கள் பணியமர்த்த காரணம் அவர்கள் தான் மிகவும் சுறுசுறுப்பாக உண்மையாக ,நேர்மையாக பணியில் இருப்பார்கள். அது மட்டும் இல்லாமல் வீடு போன்ற அமைப்பில் சுத்தமான உணவு கொடுப்பதற்கு முடியும் என்று அவர்களை பணியில் அமர்த்தி உள்ளேன்.

 இந்த கடைக்கு உள்ளே வருபவர்கள் காலணி அணிந்து வரக்கூடாது. செல்போன் பேசக்கூடாது .மது அருந்தி வந்து உணவருந்தக் கூடாது என்ற கடுமையான கண்டிஷன்கள் கடைபிடிக்கப்படுகிறது. சாப்பிட்டவர்கள் என்ன சாப்பிட்டார்கள் என்று கணக்கு சொல்வதை மட்டுமே அதற்கான பணத்தைப் பெற்றுக் கொள்கிறார் . சாப்பிட்டவற்றை கணக்கு பார்த்து பணம் வாங்குவதில்லை என்னிடம் அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை போல் நானும் அவரிடம் நம்பிக்கை வைத்துள்ளேன் என்றார்

யாரும் பரிமாறுவதற்கு வேலையாட்கள் கிடையாது. என்னென்ன வேண்டும் என்பதை வாடிக்கையாளர்களே எடுத்து சாப்பிட்டுக் கொள்ளலாம். இட்லியின் விலை 7 ரூபாய், தோசை இருபது ரூபாய், ஆனியன் தோசை 30 ரூபாய், நெய் தோசை முப்பது ரூபாய், ஆப்பம் முப்பது ரூபாய், சப்பாத்தி 22 ரூபாய் என இவர் விலை நிர்ணயம் செய்யவில்லை.
முதலில் ஐந்து ரூபாய்க்கு  இட்லி  கொடுத்தார்.  தன்னிடம் வாடிக்கையாளர்களே கட்டுபடியாகாது உணவின் தரம் மிகவும் முக்கியம் என நீங்கள் நினைப்பதால் அதற்கான விலையை நாங்களே குறிப்பிடுகிறோம் என்றனர். ஏனென்றால் அவர்  லாபம் சம்பாதிப்பதற்காக உணவகத்தை துவங்கவில்லை நாவில் ருசி, நலத்துடன் வாடிக்கையாளர்கள் நீண்ட நாள் வ ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் துவங்கியுள்ளார் என தெரிவித்தனர்.
மேலும் இவர் சமையலுக்கு பயன்படுத்தும் அனைத்து வகையான பொருட்களும் மிகவும் வெளிப்படையாக வைக்கப்பட்டுள்ளது.பொதுவாக இவர் கடைக்கு உணவருந்த வருபவர்கள் குடும்பத்துடன் வரும் பொழுது இங்கு வந்து குழந்தைகளை யாரும் திட்டக்கூடாது. அவர்களுக்கு என்ன வேண்டும் என்பதை அவர்கள் கேட்பதை சாப்பிட அனுமதி அளிக்க வேண்டும் .குழந்தைகளை திட்டினால் நாங்கள் பெற்றோர்களை திட்டுவோம் என்று உரிமையுடன் குறிப்பிடுகிறார்.
 இங்கு வரும் அனைவருமே என்னை உறவு முறையில்தான் அழைத்து வருகிறார்கள். அந்த அளவுக்கு  அவர்கள் வீட்டில் உணவு அருந்துவது போல் உள்ள சூழ்நிலையை உருவாக்கி உள்ளோம். தன்னுடைய வாழ்நாளில் ஆயிரக்கணக்கான உணவகங்களில் உணவருந்திய கசப்பான, இனிப்பான சம்பவங்களை பிரித்து இனிப்பான சம்பவங்களை மட்டுமே தன் வாடிக்கையாளர்களுக்கு தர வேண்டுமென எண்ணத்தில் உருவாக்கியது தான் என்றும் மனதில் நிற்கும் நினைவூட்டும் இட்லி கடை என்றார்.

 வெளிநாடுகளில் இருந்து வேலை பார்ப்பவர்கள் இங்கு  விடுமுறைக்கு வந்த நாட்களில் தொடர்ந்து இரவில் உணவருந்தி வருவதாகவும் அவ்வளவு ருசியாக இருப்பதாகவும் குறிப்பிடுகின்றனர். சிறு குழந்தைகள் முதல் வயதானவர்களுக்கு தேவையான அனைத்து வகையான காரம் உப்பு என அனைத்தும் அளவுடன் சமைத்து இங்கே வைக்கப்படுகிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி உரிய நேரத்தில் உணவருந்த என்னென்ன உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதையும் அதற்காகத்தான் இந்த 30 வகையான சட்டினி. 
மாலை 6 மணிக்கு மேல் சென்றாலே இவரது கடையில் வாடிக்கையாளர்கள் நிரம்பி வழிகிறார்கள். பார்சல்களில் இவ்வளவு வகையான சட்னிகளை அவர் கொடுப்பதில்லை இங்கு வந்து அமர்ந்து உணவருந்துபவர்களுக்கு மட்டும் தான் 30 வகை சட்னி.
 சாப்பிடுவதற்கு மட்டுமே இங்கு வாய் திறக்கலாம் .இட்லி ,தோசை, சப்பாத்தி  உணவுகள் தவிர டீ காபி குளிர்பானங்கள் கூட கொடுப்பதில்லை. சைவ உணவுகளை விட சைவ உணவுகள் தான் உடலுக்கு ஆரோக்கியத்தையும் உடல்நல கோளாறு ஏற்படாமல் இருக்கும் என்ற எண்ணத்தில் சைவ உணவுகளை மட்டுமே 100% கொடுத்து வருவதாக குறிப்பிட்டார்.
இதுவரை தனது உணவகத்தில் 3 லட்சம் பேர் வரை உணவருந்தி உள்ளனர். அவர்களில் 75% பேர் மீண்டும் மீண்டும் வரக்கூடிய வாடிக்கையாளர்கள் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இவர் ஆப்பத்திற்கு சுத்தமான தேங்காய் பால் கொடுக்கிறார். வீட்டில் எடுத்து சென்று சாப்பிடுவார்கள் தண்ணீரில் கலந்து சாப்பிட வேண்டும். குறிப்பாக இவர் வீட்டுக்கு பார்சல் கொடுக்காமல் கண்டிஷன் போடுவதற்கு காரணம் தன்னுடைய உணவுகளை குளிர்சாதன பெட்டியில் வைத்து சாப்பிடக்கூடாது என்ற எண்ணத்தில் அதனை நடைமுறைப்படுத்தியுள்ளார்.
 தான் 30 வகையான சட்டினியை இட்லிக்கு கொடுப்பது இப்பகுதியில் அதிகமான கூலித்தொழிலாளர்கள் வருவர்கள் அவர்கள் அதிக அளவு உணவுகளை உட்கொள்ள வேண்டும். மேலும் குழந்தைகளை ஆரோக்கியமான உணவை உட்கொண்டு உடல் நலத்தை பேண வேண்டும் என்ற எண்ணத்தில் இக்கடையை நடத்தி வருகிறேன். தன்னிடம் வரும் வாடிக்கையாளர்கள் சிலர் உணவு தீர்ந்து விட்டால் கோபத்தில் என்னிடம் சண்டை போட்டு விட்டு செல்வார்கள்.ஆனால் அவர்கள் மீண்டும் மறுநாள் வந்து தன்னிடம் மன்னிப்பு கேட்டு இங்கே அமர்ந்து உணவருந்துவதை என்னால் காண முடிந்தது .
அவர்கள் இதனை உணவகமாக கருதாமல் தன்னுடைய வீட்டில் அமர்ந்து சாப்பிடுவது போல் மனநிறையுடன் உணவு அருந்தி செல்லும் பொழுது தனக்கு ஏற்படும் மகிழ்ச்சி எல்லையே இல்லாதது. என்னைப் பொருத்தவரை நான் இவ்வளவு வகை சட்டினி இட்லி தோசைக்கு கொடுக்கிறேன் இதை மற்ற ஹோட்டல்களிலும் போய் கேட்கக்கூடாது. தரமான உணவை என்னால் கொடுக்க முடிகிறது. நான் கொடுக்கிறேன். அதேபோல் என்னிடம் வந்து அனைத்து குறைகளையும் குறிப்பிட வேண்டும் என அன்பு கட்ளையிடுகிறார்.

 பணியாளர்கள் யாரிடமும் குறைறை குறிப்பிடக் செல்ல கூடாது. என்னுடைய உணவகத்தின் சமையலறை அனைவருக்கும் வெளிப்படையாக வைக்கப்பட்டுள்ளது .இட்லி, தோசை சப்பாத்தி ,ஆப்பம் என தங்களுக்கு தேவையானவற்றை அவர்கள் ஆர்டர் செய்து தன் முன்னே அவர்கள் அதனை கொடுப்பது மேலும் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.
 ஆயிரக்கணக்கான உணவகங்கள் இருந்தாலும் தொடர்ந்து தரமான நல்ல ருசியான உணவினை ருசித்து நாவினால் மீண்டும் ருசிக்க வாடிக்கையாளர்களை தொடர்ந்து ஈர்த்துக் கொண்டே இருக்கிறது இந்த நினைவூட்டும் இட்லி கடை .

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய..... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய...... https://t.co/nepIqeLanO