திருச்சி திருவெறும்பூர் கூத்தைப்பார் பேரூராட்சியில் மீண்டும் துணைத் தலைவருக்கு திமுக, சிபிஐ வேட்புமனுத்தாக்கலால் பரபரப்பு

திருச்சி திருவெறும்பூர் கூத்தைப்பார் பேரூராட்சியில் மீண்டும் துணைத் தலைவருக்கு திமுக, சிபிஐ வேட்புமனுத்தாக்கலால் பரபரப்பு

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைபார் பேரூராட்சியில் 18 வார்டு உறுப்பினருக்கான தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதி நடைபெற்றது. அதில் திமுக 14 இடங்களிலும் காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி தலா ஒரு இடத்தில்   வெற்றிபெற்றது. வெற்றி பெற்றவர்கள்  கடந்த 4-ம் தேதி பதவி ஏத்தனர்.  6ம் தேதி தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் இவர் பதவிக்கு திமுகவை சேர்ந்த செல்வராஜ் போட்டியிட்டுத் தேர்வு செய்யபட்டார்.

துணைத் தலைவர் பதவிக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 18 வது வார்டு உறுப்பினர் வைசூர்யாவும், 12வது வார்டு திமுக உறுப்பினர் பழனியாண்டியும் போட்டியிட்டனர்.இதில் பழனியாண்டி வெற்றி பெற்றார். திமுக தலைமை அறிவித்தது மீறி போட்டியிட்டவர்கள் பதவி விலகும்படி திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் அறிக்கை தரும்படி பழனியாண்டி தனது பதவியை கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து, இன்று மீண்டும் துணை தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இன்று கூத்தைப் பார் பேரூராட்சி தேர்தல் அலுவலரும், திருச்சி ஆர்டிஒவுமான தவச்செல்வம் தலைமையில் தேர்தல் நடைபெறுவதாக இருந்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த வைசூர்யாவும், பழனியாண்டியும் மீண்டும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து தேர்தல் நடத்துவதற்கு முடிவு செய்த நிலையில் 8 உறுப்பினர்கள் மட்டுமே வந்ததால் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக தவச்செல்வம் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK

#டெலிகிராம் மூலமும் அறிய... https://t.co/nepIqeLanO