திருச்சியில் விலையில்லா மிதிவண்டி - அமைச்சர்கள் தொடங்கி வைப்பு!!

திருச்சியில் விலையில்லா மிதிவண்டி - அமைச்சர்கள் தொடங்கி வைப்பு!!

திருச்சி மாவட்டத்தில் விலையில்லா மிதிவண்டிகளை 10,622 மாணவ-மாணவிகளுக்கு 9 கோடியே 68 லட்சம் மதிப்பில் அமைச்சர்கள் இன்று வழங்கி தொடங்கி வைத்தனர்.

Advertisement

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா பள்ளிகளில் பயிலக்கூடிய பதினோராம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி கொடுக்கும் திட்டத்தை தொடங்கி வைத்திருந்தார். அதன் தொடர்ச்சியாக அந்த திட்டத்தின் கீழ் கடந்த 2020 - 2021 ஆம் கல்வி ஆண்டிற்கான விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் இன்று திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் பள்ளியில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இவ்விழாவில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி மாவட்ட ஆட்சியர் சிவராசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருச்சி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயில கூடிய பதினோராம் வகுப்பு மாணவ மாணவிகள் 24 ஆயிரத்து 587 பேருக்கு, 

9 கோடியே 68 லட்சத்து 87 ஆயிரத்து 817 ரூபாய் மதிப்பில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி துவக்கி வைக்கபட்டது. 

 முதல் கட்டமாக திருச்சி கிழக்கு, மேற்கு, திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள மாணவர்கள் 3284 பேருக்கும்,மாணவிகள் 4719 பேருக்கும், என மொத்தம் 8003 பேருக்கு 3 கோடியே 14 லட்சத்து 97 ஆயிரத்து 271 மதிப்பிலும், 

Advertisement

ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள மாணவர்கள் 1109 பேருக்கும் மாணவிகள் 1510 பேருக்கும் என மொத்தம் 2619 பேருக்கு 1 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பில் இன்று மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.