ஜி கார்னரில் தற்காலிக சந்தை தொடரலாம் - ரயில்வே நிர்வாகம் ஒப்புதல்

ஜி கார்னரில் தற்காலிக சந்தை தொடரலாம் - ரயில்வே நிர்வாகம் ஒப்புதல்

காந்தி சந்தை திறப்பது குறித்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை இறுதித் தீர்ப்பு வரும் வரை ஜீ கார்னர் மைதானத்தில் தற்காலிக சந்தை செயல்பட ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.

Advertisement

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக காந்தி சந்தை காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.இதனால் மாவட்ட நிர்வாகம் ரயில்வே துறைக்கு சொந்தமான ஜி கார்னர் பகுதியில் தற்காலிகமாக மொத்த விற்பனையை செய்வதற்கு வியாபாரிகளுக்கு அனுமதி அளித்தது. 

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ரயில்வே மைதானத்தில் செயல்படும் தற்காலிக சந்தையை வரும் 31ம் தேதிக்குள் காலி செய்ய ரயில்வே நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதையடுத்து வியாபாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. பின்பு ரயில்வே நிர்வாகம் காந்தி மார்க்கெட் குறித்த உயர்நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வரும்வரை ஜி கார்னர் பகுதியில் தற்காலிக சந்தை நடைபெறுவதற்கு ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.

Advertisement