நீதிமன்ற படத்துடன் காரில் கொடி - மற்றொரு வாகன ஒட்டுநருக்கு அபராதம் - ரகளை - உதவி ஆய்வாளரை மாற்றிய அதிரடி எஸ்.பி

நீதிமன்ற படத்துடன் காரில் கொடி - மற்றொரு வாகன ஒட்டுநருக்கு அபராதம் - ரகளை - உதவி ஆய்வாளரை மாற்றிய அதிரடி எஸ்.பி

நேற்று (19.10.21) திருச்சி மாவட்டம் முசிறி -  குளித்தலை பெரியார் பாலத்தில் போக்குவரத்து போலீசார் வாகன  சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த TN 48 AR 3700 TATA Ace வாகனத்தை சோதனை செய்ததில், அதை ஓட்டிய வாகன ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனத்தை ஓட்டி உள்ளார். அந்த வாகனத்தின் முன்பு பம்பர் பொருத்தப்பட்டிருந்தது.  வாகனத்தை ஓட்டுநர் உரிமம் இன்றி ஓட்டியதற்கு ஓட்டுனர் மீது மோட்டார் வாகனச் சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரது வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த பம்பரை கழட்டும்படி அறிவுறுத்தப்பட்டது.

      வழக்குப் பதிவு செய்ததால் ஆத்திரமடைந்த TATA Ace வாகன ஓட்டுனரும் அதன் உரிமையாளரும் போலீசாருடன் வாக்குவாதம் செய்துள்ளனர். அப்போது அங்கு வந்த மற்றொரு வாகனமான TN 45 BA 7967 ன் மீது வழக்கு பதிவு செய்யச் சொல்லி விவாதம் செய்தனர்.

          மேற்கண்ட நிகழ்வு குறித்து 18.10.21 ம் தேதி மாலை சமூகவலைதளங்களில் வீடியோ பரவியது. ஆனால் TN 45 BA 7967  என்ற வாகனத்தை இயக்கியவர் மீது வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாததற்கு ஒரு வழக்கும், அவ்வாகனத்தின் முன் பம்பர் பொருத்தி இருந்ததால் அதற்கு ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

         மேற்கண்ட சமூகவலைதள பதிவு குறித்து முறையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணைக்குப் பின் தவறிழைத்த காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வாகன சோதனையில் ஈடுபடும் அலுவலர்களும் காவலர்களும் சட்டத்தை மீறுபவர்கள் மீது எவ்வித பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி  அறிவுறுத்தினர்.

 விசாரணையின் முடிவில் வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் வடமலை திருச்சி ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.ஏற்கனவே அரசு வாகனங்கள் மற்றும் அனைத்து வாகனங்களிலும் முன்னால் உள்ள பம்பரை உடனடியாக அகற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இன்னும் சில அரசு அதிகாரிகளும் ,பொதுமக்களும் பம்பரை அகற்றாமல் உள்ளனர் .

தொடர்ந்து காவல்துறையினர் சோதனையிட்டு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில் இச்சம்பவத்தில் வீடியோ காட்சியில் பதிவாகியுள்ள காரில் நீதிமன்ற படத்துடன் கொடி ஒன்று காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. அந்த காரிலும் பம்பர் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்தக் காருக்கு எவ்வித அபராதமும் விதிக்கப்படாததால்  போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளர் வடமலையை ஆயுதப்படைக்கு மாற்றி அதிரடி ஆக்சனில் இறங்கினார் மாவட்ட எஸ்பி.

மேலும் அந்த கார் வழக்கறிஞர்களுக்கு சொந்தமானது எனவும் சகோதரர்களான  ரமேஷ் மற்றும் கண்ணண் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. காவல்துறையினர் விசாரணையை துவக்கி உள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn