திருநங்கையர்கள் சொந்தத் தொழில் துவங்கிட விண்ணப்பம் செய்யலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தகவல்

திருநங்கையர்கள் சொந்தத் தொழில் துவங்கிட விண்ணப்பம் செய்யலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தகவல்

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பாக திருநங்கையர்கள் வாழ்வில் முன்னேற்றம் அடையச் செய்வதற்காக, திருநங்கையர் சொந்த தொழில் துவங்கிட மாவட்ட தேர்வுக் குழுவினால் தேர்வு செய்யப்படும் திருநங்கைகளுக்கு ரூ.50,000/-மானியமாக வழங்கப்பட உள்ளது. இதற்காக 2020-21ஆம் நிதியாண்டில் மாநில அளவில் ரூ.100/- கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சொந்த தொழில் துவங்க விருப்பமுள்ள திருநங்கைகள் தாங்கள் துவங்க உள்ள தொழில் தொடர்பான கருத்துருவினை திருச்சிராப்பள்ளி மாவட்ட சமூகநல 
அலுவலகத்திற்கு 30.10.2021க்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ 
அனுப்பிட வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட சமூகநல அலுவலகத்தை நேரிலோ அல்லது 0431-2413796 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn