திருச்சி மாநகராட்சி கூட்டத்திலிருந்து அதிமுக கவுன்சிலரை வெளியேற்றிய திமுக கவுன்சிலர்கள்

திருச்சி மாநகராட்சி கூட்டத்திலிருந்து அதிமுக கவுன்சிலரை வெளியேற்றிய திமுக கவுன்சிலர்கள்
திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில், இன்று நடைபெற்றதது. இக்கூட்டம் துவங்கி, பத்து நிமிடங்கள் மட்டுமே போட்டோகிராபர்கள், வீடியோகிராபர்கள் அரங்கிற்குள் இருக்க அனுமதிக்கப்பட்டனர். அதன் பின், அவர்களை வெளியேற்றி விட்டு நிருபர்களை மட்டும் வைத்துக் கொண்டு கூட்டம் நடத்தினர்.

இது தவிர, பார்வையாளர் பகுதியில் இருந்த நுழைவு வாயில் அடைக்கப்பட்டு, பராமரிப்பு பணி நடப்பதாக கூறி யாரும் அனுமதிக்கப்படவில்லை. திருச்சி மாநகராட்சியை பொருத்தவரை, பெரும்பான்மை தி.மு.க, கவுன்சிலர்களே உள்ளனர்.

இன்று நடந்த கூட்டத்தில் அ.தி.மு.க.,  கவுன்சிலர் அம்பிகாபதி....... அமைச்சர் நேருவின் தொகுதிக்குட்பட்ட பகுதியில் புதிய தார் ஃசாலைகள் அமைக்கப்படுவது குறித்தும், வார்டு பகுதியில் சாலை வசதி செய்யாதது பற்றியும் கேள்வி எழுப்பினார். 

உடனே குறுக்கிட்ட கோட்டத் தலைவர், அதிமுக கவுன்சிலர் அம்பிகாபதியை தகாத வார்த்தைகளால் திட்டி, அமைச்சர் தொகுதியைப் பற்றி பேசுவதற்கு யாருக்கும் அருகதை இல்லை, என்று ஆவேசப்பட்டார். அதனால், அதிமுக கவுன்சிலர்கள் மூன்று பேரும் மாநகராட்சி கூட்டத்தை புறக்கணித்து, அரங்கை விட்டு வெளியேறினர்.

அதிமுக கவுன்சிலர் அம்பிகாபதி மாநகராட்சி மேயரிடம் முறையிட்டு கொண்டிருந்து பொழுது திமுக மாமன்ற உறுப்பினர் செல்வம் அவரை முதுகில் கையை வைத்து வெளியில் தள்ளி விட்டார். வார்டு பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்பிய அதிமுக கவுன்சிலரை, மண்டல தலைவர் தகாத வார்த்தைகளால் திட்டி வெளியேற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn