நள்ளிரவில் நவராத்திரி பூஜை நடத்திய அகோரிகள் -பரபரப்பு

நள்ளிரவில் நவராத்திரி பூஜை நடத்திய அகோரிகள் -பரபரப்பு

திருச்சி மாநகரை அடுத்த அரியமங்கலத்தில் ஜெய் அகோரகாளி கோவில் உள்ளது. இதனை காசியில் அகோரி பயிற்சிபெற்ற அகோரி மணிகண்டன் பூஜைகள் செய்து நிர்வகித்து வருகிறார். இங்குசனிக்கிழமை, அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி மற்றும் விஷேச காலங்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றது. இதனிடையே இவ்வாலயத்தில் நவராத்திரி விழா நேற்று (27.09.2022) தொடங்கியது. நவராத்திரி விழாவின் 2ம் நாளான இன்று ஜெய் அகோரகாளி வாராகி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

அதனைத்தொடர்ந்து நள்ளிரவில் நவதானியங்களை தீயில் இட்டு மகா ஹோமம் நடைபெற்று ஜெய் அகோரகாளிக்கு பூஜை செய்யப்பட்டும், ஜெய் அஷ்டகாலபைரவர் மற்றும் அங்குள்ள ஏனைய பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. இதையடுத்து நள்ளிரவில் அகோரிகளின் யாக பூஜையின் போது டம்ரா மேளம் அடித்தும் மற்றும் சிவவாக்கியம் வாசித்தும், சங்கு முழங்கியும், மந்திரங்கள் ஓதினர். அகோரிகள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டு காளியை வழிபட்டதுடன், ஆசிபெற்றுச் சென்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...   https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய..... https://t.co/nepIqeLanO