திருச்சியில் ரூபாய் 1.37 கோடி மதிப்பிலான ஊக்க மாத்திரைகள் பறிமுதல் - 3 பேரிடம் விசாரணை
சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. இந்த விமானத்தில் பயணித்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது 3 பயணிகளின் உடமைகளில், வெளிநாட்டு தயாரிப்பு ஊக்க மாத்திரைகள் அடங்கிய 407 பாக்கெட்டுகளை கொண்டு வந்தது தெரியவந்தது. இது குறித்து சுங்கத்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அவை சுவிட்சர்லாந்தில் தயாரிக்கப்பட்ட விலை உயர்ந்த ஊக்க மாத்திரைகள் என்பது தெரியவந்தது.
அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் 3 பயணிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட மாத்திரைகளின் மொத்த மதிப்பு ரூ.1.37 கோடி என்று சுங்கத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision