இஸ்ரோவிற்கு பயணிக்கும் திருச்சி பள்ளி மாணவர்கள்
அறிவியல் பாடம் பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகளில் அவர்களது திறனை வெளிக்கொணரும் வகையில் அறிவியல் கண்காட்சிகள் நடத்தினாலும் மாணவர்களது கனவு ஒருமுறையாவது இஸ்ரோ அறிவியல் மையத்தை காணவேண்டும். அதன்வாயிலாக அறிவியல் மற்றும் வானியல் சார்ந்த தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்பது கனவாக இருந்து வந்தது.
இந்த நிலையில், திருச்சி திருவெறும்பூரில் செயல்பட்டு வரும் அப்துல்கலாம் அகாடமி சார்பில் பல்வேறு பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களின் கனவை நனவாக்கும் வகையில் இன்றையதினம் இஸ்ரோவை பார்வையிட அழைத்துச் சென்றனர். விண்வெளி குறித்த அதிசயக்கத்தக்க தகவல்களை நேரில் தெரிந்துக்கொள்ளவும், அதன்மூலம் தங்களது அறிவியல் திறனை வளர்த்து கொள்ளவும் அப்துல்கலாம் அகாடமியில் பயிலும் 35 பள்ளி மாணவ, மாணவிகள் திருச்சி ஜங்சன் ரெயில் நிலையத்திலிருந்து ரெயில் மூலம் பெங்களுர் புறப்பட்டுச் சென்றனர்.
அங்கு இரண்டு நாட்கள் தங்கியிருந்து இஸ்ரோ செயற்கைகோள் தயாரிப்பு, அறிவியல் தொடர்பான ஆய்வகங்களை பார்வையிட உள்ளனர். இதன்மூலம் பள்ளி மாணவ, மாணவிகளின் அறிவியல் தொழில்நுட்ப திறன் மற்றும் சிந்திக்கும் திறன், பன்முக கற்றல் திறன், ஆராய்ச்சி மனப்பான்மை போன்றவை மேம்பாடு அடைய வாய்ப்பாக அமையும். மேலும் தங்களது அறிவியல் படைப்புகளை எடுத்துச் சென்று விஞ்ஞானிகளிடம் காண்பித்து பாராட்டுகளை பெற வேண்டும் என்ற ஆர்வத்தில் மாணவர்கள் உள்ளனர்.
இது போன்ற அறிவியல் திறன் வளர்க்கும் சுற்றுலா மாணவர்களின் மனதில் நீங்க இடம் பெறும். அவர்களின் எதிர்கால திட்டமிடல்களுக்கு உதவும் என்பதில் ஐயமில்லை.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision