ஏழரைக் கூட்டிய முதல் வேட்பு மனு - டெபாசிட்டுக்கு டெபிட் கார்டு - வாக்குவாதம்

ஏழரைக் கூட்டிய முதல் வேட்பு மனு - டெபாசிட்டுக்கு டெபிட் கார்டு - வாக்குவாதம்

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் இன்று முதல் தங்களுடைய வேட்பு மனுவை விண்ணப்பிக்க தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார் முன்னிலையில் திருச்சி உறையூர் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஓட்டுநர் ராஜேந்திரன் தன்னுடைய முதல் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். 

மேலும் இதற்கு வைப்பு தொகையாக செலுத்த வேண்டிய 25 ஆயிரம் ரூபாய் பணத்தை தன்னுடைய கடன் வங்கி அட்டை மூலம் செலுத்துவேன் என்று மாவட்ட ஆட்சியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரிடமிருந்து வேட்பு மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் வைப்பு தொகையை செலுத்த அறிவுறுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சுயேட்சை வேட்பாளரான ராஜேந்திரன்...  இந்தியா டிஜிட்டல் மயமாகி வருகிறது என கூறிக் கொள்ளும் இந்த அரசு தேர்தல் ஆணையத்தில் மட்டும் ஏன் டிஜிட்டல் முறையை கடைபிடிக்கவில்லை.

சாதாரண தள்ளுவண்டி கடையில் ஆரம்பித்து பெரிய கடைகள் வரை டிஜிட்டல் முறையை கையாளும் நிலையில், வேட்பாளர் விண்ணப்பத்திற்கு பெறப்படும் டெபாசிட் தொகையை ஏன் டிஜிட்டல் மையம் மூலம் பெறக் கூடாது. நான் என்னுடைய வங்கி கடன் அட்டை மூலம் பணம் செலுத்துவதற்கு தயாராக இருந்தும், தேர்தல் நடத்தும் அலுவலர் அந்த பணத்தை பெற்றுக் கொள்வதற்கான வசதி ஏற்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டினார். எனவே தேர்தல் ஆணையம் டெபாசிட் தொகையை வேட்பாளர்கள் இடமிருந்து பெறுவதற்கு டிஜிட்டல் முறையை பயன்படுத்தி கியூ ஆர் கோடு மூலம் பணத்தை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையும்  முன் வைத்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision