திருச்சியில் 11வது உலகத் தமிழ் மாநாடு நடத்திட ஆதரவு திரட்டும் சமூக ஆர்வலர்கள்

திருச்சியில் 11வது உலகத் தமிழ் மாநாடு நடத்திட ஆதரவு திரட்டும் சமூக ஆர்வலர்கள்

உலகத் தமிழ் மாநாடு என்பது உலகில் உள்ள அனைத்து தமிழா்களையும் மொழியின் பால் ஒன்று சோ்ப்பதற்காக நடைபெறும் ஒரு முக்கிய நிகழ்வாகும். இம்மாநாடு தமிழையும், தமிழாின் பெருமையையும் உலகோர் அறியச் செய்ய கருப்பொருளாக விளங்குகிறது. இம்மாநாட்டில் பங்காற்றுவது ஒவ்வொரு தமிழனின் மொழி காக்கும் செயலாகும். முதல் மாநாடு மலேசியா 1966, இரண்டாம் மாநாடு சென்னை 1968, மூன்றாம் மாநாடு பாரிஸ் 1970, நான்காம் மாநாடு இலங்கை 1974, ஐந்தாம் மாநாடு மதுரை 1981, ஆறாம் மாநாடு மலேசியா 1987, ஏழாம் மாநாடு மொரிசியஸ் 1989, எட்டாம் மாநாடு தஞ்சாவூர் 1995, ஒன்பதாம் மாநாடு மலேசியா 201, பத்தாவது 2019 -ல் சிகாகோவில் நடைபெற்றது.

11வது மாநாடு திருச்சியில் நடத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்
கே.என் நேருவை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட பின்னர் இது தொடர்பாக தமிழக வளர்ச்சி துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் கலந்து பேசி, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக அமைச்சர் கே.என்.நேரு உறுதியளித்துள்ளார். மேலும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  பொய்யாமொழி, மத்திய மண்டலத்தில் உள்ள அமைச்சர்களான எஸ்.ரகுபதி, வி. செந்தில்பாலாஜி, சிவ.வீ. மெய்யநாதன், எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சந்தித்து கோரிக்கையை வலியுறுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து  நேரடியாக முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்து மனு அளிக்கவும் முடிவு  முடிவு செய்துள்ளனர். 

இந்த பதினோராவது மாநாட்டை தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் நடத்த வேண்டும் என்று பல்வேறு உலக தமிழ் சங்கங்கள் ஆதரவு அளித்து வரும் நிலையில் தாய்லாந்து தமிழ்சங்கம் மற்றும் TIDES அமைப்பின் உறுப்பினரான முத்து கணேசன் கூறுகையில், தமிழகத்தின் தொன்மையான நகரங்களில் ஒன்று காவேரி கரையில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி. திருச்சியை முறையே பல்லவர்கள், பிற்காலச் சோழர்கள், பாண்டியர்கள், மொகலாயர்கள், விஜயநகரப் பேரரசு, நாயக்கர்கள், ஆங்கிலயேர்கள் எனப் பல்வேறு காலக் கட்டங்களில் பல்வேறு மன்னர்கள் ஆட்சி செய்து தனி முத்திரைபதித்துள்ளார்கள். பழமையும் புதுமையும் கொண்ட தமிழ்நாட்டின் பரப்பளவு அடிப்படையில் திருச்சி மூன்றாவது பெரிய மாநகரமாகும். இது தென்னாட்டுக் கயிலை மலை என்றும் புகழப்படுகிறது. சைவமும், வைணவமும் சிறந்து விளங்கியது போல பகுத்தறிவும் சேர்ந்தே வளர்ந்த இடம் திருச்சிராப்பள்ளி எனில் மிகையன்று.

உலகத் தமிழ் மாநாட்டை தமிழகத்தில் நடத்த வேண்டி தனது ஆதரவை தெரிவித்தும் மற்றும் அனைத்து உலகத் தமிழ்ச் சங்கங்களின் ஆதரவைப் பெறும் முயற்சியிலும் தாய்லாந்து தமிழ்ச் சங்கம் ஈடுபட்டுள்ளது.மேலும், தமிழகத்தில் சென்னை, மதுரை, தஞ்சாவூர் மற்றும் கோவையில் 2010இல் செம்மொழி மாநாடுகள் பல்வேறு கால கட்டங்களில் நடைபெற்றுள்ளதால், வரும் மாநாட்டை, தமிழ் நாட்டின் மைய பகுதியான திருச்சிராப்பள்ளியில் நடத்தப்பட்டால், அதன் புராதான வரலாற்றுக்கு பெருமை சேர்ப்பதாக இருக்கும். அதுமட்டுமின்றி இம்மாநாட்டில் உலக தமிழர்கள் கலந்து கொள்வதற்கு ஏதுவான வகையில் 

திருச்சி சாலைப் போக்குவரத்து, தொடர் வண்டி, வான்வழிப் போக்குவரத்தின் மூலம் இந்தியாவின் பல நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ள பெருநகரமாகும். 
மேலும் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து தமிழர்கள் அதிகம் வாழ்ந்து வரும் தென் கிழக்கு ஆசிய நாடுகளான சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாட்டிற்கும், இலங்கை மற்றும் வளைகுடா நாடுகளுக்கும் நேரடி வானூர்திச் சேவை உள்ளது. இந்நாடுகளிலிருந்து உலகத் தமிழார்வலர்கள் வருவதற்கு மிகவும் எதுவாக இருக்கும்.

திருச்சியில் 2023-ஆம் ஆண்டு நடைபெறப்போகும் உலகத் தமிழ் மாநாட்டின் வாயிலாக நம் நாட்டின் ஒத்த கருத்துக் கொண்ட பல தேசிய மற்றும் பிற மாநில முதல்வர்களையும் அழைத்து இந்தியாவில் தமிழை ஆட்சி மொழியாகவும், இந்திய நாட்டின் குடியாட்சி மாண்பு மற்றும் இறையாண்மையைப் பேணிக் காப்பது போன்ற கோரிக்கைகளைத் தீர்மானமாக நீங்கள் தான் ஐயா முன்மொழிய வேண்டும். இந்திய அளவில் தமிழ்நாடு தழைத்தோங்கவும், தமிழ்மொழியைச் செழித்தோங்கவும் செய்ய வேண்டும் என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81