தூங்கி கொண்டிருந்த போதே தூக்கிட்டானுங்க - கே.கே.நகர் போலீஸ் ஸ்டேஷனில் புகார்!

தூங்கி கொண்டிருந்த போதே தூக்கிட்டானுங்க -  கே.கே.நகர் போலீஸ் ஸ்டேஷனில் புகார்!

திருச்சி கே.கே.நகர் தேவராய நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் இளவரசன்(28). இவர் தனியார் மருத்துவ நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல டிவி பார்த்து விட்டு, வீட்டின் கதவை தாழிட்ட பின்னர் தனது மனைவி சொர்ணலட்சுமியுடன் இரவில் தூங்கி உள்ளார். 

Advertisement

விடிந்து எழுந்து பார்த்த போது மனைவி சொர்ண லட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க தாலி செயின், ஒன்றரை பவுன் செயினை காணவில்லை. மேலும் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து கே.கே.நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் அளித்துள்ளனர். இதன் பேரில் அங்கு வந்து போலீசார் விசாரணை நடத்தினர். நடத்தப்பட்ட விசாரணையில் இரவு நேரத்தில் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர் கழுத்து சங்கிலியை வெட்டி எடுத்து சென்றிருக்கலாம், அதற்கு முன் அவன் மயக்க மருந்து தெளித்து இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Advertisement

ஆள் இல்லாத வீட்டில் கொள்ளை நடக்கும் நிலை மாறி, தற்போது ஆள் இருக்கும் போதே வீட்டு கதவை உடைத்து கொள்ளை நடைபெறும் சம்பவம் தொடங்கியுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS