பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க கோரி சாலையில் மரக்கன்று நட்டு போராட்டம்!!

பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க கோரி சாலையில் மரக்கன்று நட்டு போராட்டம்!!

திருச்சி மாநகராட்சி 63வது திருவெறும்பூர் வார்டில் பாதாள சாக்கடை பணி தரமில்லாமலும், ஓராண்டிற்கும் மேலாக கால தாமதம் செய்து வருகிறது மாநகராட்சி நிர்வாகம். 

Advertisement

இதனால் தெருச் சாலைகள் நடக்ககூட இயலாத சூழலை உருவாக்கி உள்ளது. பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க மாநகராட்சியிடம் பலமுறை மனு கொடுத்தும் கோரிக்கை வைத்து பலனில்லாததால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் விண் நகர் பகுதியில் வாழைக்கன்று நடும் போராட்டம் நடத்தினர்.

Advertisement

பின்னர் மாநகராட்சியை கண்டித்து போராட்டம் நடத்தினர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO