பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர்கள் கிழிப்பு - பொதுமக்கள் ஆவேசம்.

பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர்கள் கிழிப்பு - பொதுமக்கள் ஆவேசம்.

வருகின்ற 2021 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவின் இளைஞர், இளம் பெண்கள் பாசறை பூத் கமிட்டி மாவட்ட செயல்வீரர்கள் மாநகர், மாவட்ட ஆலோசனை கூட்டம் திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்திற்கு அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கலந்து கொண்டுள்ளனர்.  

இந்நிகழ்ச்சிக்காக திருச்சியின் பிரதான சாலையாக உள்ள டிவிஎஸ் டோல்கேட் பகுதி முழுவதும் அதிமுகவின் கொடிகள் மற்றும் வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி தலைமை தபால் நிலையத்திலிருந்து குட்செட் பாலம் வழியாக டிவிஎஸ் டோல்கேட் வரை மேம்பாலத்தின் இருபுறமும் அதிமுகவின் கொடி மற்றும் வரவேற்பு பிளக்ஸ்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் திருச்சியில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் இன்று மழை பெய்யாத நிலையில் காற்றின் வேகம் அதிகமாக வீசி வருகிறது.

இதனால் சாலையின் இருபுறமும் வைக்கப்பட்டுள்ள அதிமுக கொடிக்கம்பங்கள் மற்றும் வரவேற்பு பதாகைகள் காற்றில் அசைந்து சாய்ந்து விழும் நிலையில் உள்ளன. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்தில் பயணிக்கின்றனர். இது மட்டுமின்றி சாலையின் தடுப்பின் நடுவே விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் குட்செட் பாலத்தின் வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பிளக்ஸ் காற்றில் கிழிந்து விபத்தை ஏற்படுத்தும் வகையில் தொங்கிக் கொண்டிருந்ததை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் ஆத்திரமடைந்து அந்த கிழித்து எறிந்தனர். மேலும், டிவிஎஸ் டோல்கேட்லில் இருந்து மன்னார்புரம் செல்லக்கூடிய சர்வீஸ் ரோடு முழுவதும் விளம்பரப் பலகைகள் வைத்து அடைக்கப்பட்டு உள்ளதால் போக்குவரத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement

இதனால் வாகன ஓட்டிகள் மாற்று பாதையில் செல்வதால் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சாலைகளில் விளம்பர, வரவேற்பு பிளக்ஸ் மற்றும் கொடிகள் வைக்க கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்கவிட்டு திருச்சியில் அதிமுகவினர் வரவேற்பு பிளக்ஸ் மற்றும் கொடிகளை வைத்திருப்பது பொதுமக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO