நாளை திருச்சி மாநகர் முழுவதும் போக்குவரத்து மாற்றம்

நாளை (14. 06.2025 )அன்று திருச்சி மாநகரில் ஜமால் முகமது கல்லூரி முதல் கேம்பியன் பள்ளி வரை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பேரணி செல்ல உள்ளதால் பேரணையின் போது கீழ்க்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது.
கனரக வாகனங்கள் புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து திருச்சி மாநகரம் வழியாக செல்லும் கனரக சரக்கு வாகனங்களை அனைத்தும் மாத்தூர் பரணி ஹோட்டல் ஜங்ஷனிலிருந்து சுற்றுச்சாலையில் திருப்பி காவல் சோதனை சாவடி இரண்டு வழியாக செல்ல வேண்டும்.ஜி கார்னரில் இருந்து ஏர்போர்ட் மற்றும் புதுக்கோட்டை செல்லும் அனைத்து வாகனங்களும் மன்னார்புரம் மேம்பாலம் செட்டியப்பபாலம் காவல் சோதனை சாவடி இரண்டு வழியாக புதிய சுற்றுச்சாலை வழியாக செல்ல வேண்டும்.
புறநகர் பேருந்துகள் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து முத்திரை சிலை வழியாக சென்னை நாமக்கல்,சேலம்,தஞ்சாவூர் செல்லும் அனைத்து பேருந்துகளும் பெரியார் சிலை காமராஜர் சிலை அரிஸ்டோ மேம்பாலம் மன்னார்புரம் மன்னார்புரம் ஈபி ஆபீஸ் வழியாக தேசிய நெடுஞ்சாலையில் சென்று வர வேண்டும்.
புதுக்கோட்டையிலிருந்து சென்னை மற்றும் திருச்சி மாநகருக்குள் செல்லும் பேருந்துகள் மற்றும் இதர வாகனங்கள் வயர்லெஸ் சாலையில் திருப்பி விடப்பட்டு கே கே நகர் எல்ஐசி காலனி சந்திப்பு சுந்தர் நகர் மன்னார்புரம் வழியாக செல்ல வேண்டும். நகரப் பேருந்துகள் பாலக்கரை பகுதியில் இருந்து மத்திய பேருந்து நிலையம் வரும் நகரப் பேருந்துகள் பாலக்கரை மேம்பாலத்தில் திருப்பி விடப்பட்டும். பீமநகர் நீதிமன்றம் வெஸ்டிபள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பெரிய மிளகு பாறை வழியாக செல்ல வேண்டும்.
மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பாலக்கரை வழியாக செல்லும் நகரப் பேருந்துகள் வெஸ்டி, எம்ஜிஆர் சிலை, புத்தூர் நால்ரோடு,சவுத் ஆர்சு, தென்னூர் பாலம் வழியாக செல்ல வேண்டும்.இதர வாகனங்கள் எம்ஜிஆர் சிலை ரவுண்டானாவில் இருந்து டிவிஎஸ் டோல்கேட் செல்லும் அனைத்து வாகனங்களும் கண்ட்ரோல்மென்ட் எ டபிள்யூ பி எஸ் சந்திப்பு, ஒய் டபிள்யூ சி ஏ, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பெரிய மிளகுபாறை அரிஸ்டோ மேம்பாலம் மன்னார்புரம் வழியாக செல்ல வேண்டும்.
ஜி கார்னரில் இருந்து ஏர்போர்ட் மற்றும் புதுக்கோட்டை செல்லும் அனைத்து வாகனங்களும் மன்னார்புரம் கே கே நகர் வயர்லெஸ் சாலை வழியாக செல்ல வேண்டும்.பேரணி துவங்கி முடியும் வரை பொதுமக்கள் டிவிஎஸ் டோல்கேட்டில் இருந்து கன்டோன்மென்ட் எ டபிள்யூ பிஎஸ் சந்திப்பு சாலையில் சென்று வருவதை தவிர்த்து மாற்று வழி பாதையில் சென்று வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision