திருச்சி மாநகராட்சியுடன் 22 ஊராட்சிகள் இணைப்பு.

திருச்சி மாநகராட்சியுடன் 22 ஊராட்சிகள் இணைப்பு.

திருச்சி மாநகராட்சியுடன் திருச்சியில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் எதுவும் இணைக்கப்படவில்லை. அதேசமயம், 22 கிராம ஊராட்சிகளை திருச்சி மாநகராட்சியுடன் இணைத்து தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (தேர்தல்) துறை சார்பில் அரசு முதன்மை செயலாளர் கார்த்திகேயன் அரசாணை எண் 202 (31.12.2024) வெளியீட்டுள்ளார்.

இதில், மல்லியம்பத்து, கம்பரசம்பேட்டை, மருதாண்டாகுறிச்சி, முத்தரசநல்லூர், அதவத்தூர், அல்லித்துறை, கே.கள்ளிக்குடி, குமரவயலூர், நாச்சிக்குறிச்சி (சோழங்கநல்லூர்), புங்கனூர், சோமரசம்பேட்டை, குண்டூர், கீழக்குறிச்சி, கும்பக்குடி (பகுதி), நவல்பட்டு (பகுதி), அப்பாதுரை, தாளக்குடி, வாளாடி, நெருஞ்சலக்குடி, கூத்தூர், மாதவ பெருமாள் கோவில், பிச்சாண்டார் கோவில் ஆகிய 22 கிராம ஊராட்சிகளும் அடங்கும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision