விரைவில் பாஜகவில் ஓ.பன்னீர்செல்வம் - திருச்சியில் முன்னாள் அமைச்சர் தகவல்
இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்ட போது எடப்பாடி பழனிச்சாமி மீட்டெடுத்தார். தமிழகத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில் கருணாநிதி மற்றும் திமுக அமைச்சர்களை பாராட்டி பேசியது தொண்டர்களுக்கு வேதனை அளிப்பதாக உள்ளது. தொகுதி பக்கம் செல்லாமல் அவரது மகன் ரவீந்திரநாத் தொகுதியின் வளர்ச்சிக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்கு சென்றதாக கூறுவதை ஏற்க முடியாது.
ஆகவே திமுகவுடன் தந்தை மகனுக்கு மறைமுக உறவு இருப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம். இந்த இயக்கத்தை பிளவுபடுத்த நினைக்கிறார்கள். எந்த கொம்பனாலும் அதிமுகவை பிளவுபடுத்த முடியாது. எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் ஒற்றை தலைமை இருந்தால் மட்டுமே மீண்டும் அதிமுகவை ஆட்சிக்கு கொண்டு வர முடியும்.
ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்னொரு இயக்கம் பிறக்க வாய்ப்பு இல்லை. அவர் விரைவில் பாஜகவுடன் சேர்ந்து விடுவார். திமுகவை எதிர்க்கும் வல்லமை எடப்பாடி பழனிச்சாமிக்கு மட்டுமே இருக்கிறது. திருச்சியில் 99.9% சதவீத தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் இருக்கிறார்கள்.
டிடிவி தினகரன் சசிகலா சுற்றுப்பயணம் எங்களை எந்த விதத்திலும் எங்களைப் பாதிக்காது. டிடிவி தினகரன் அதிமுக பற்றி பேச எந்த அருகதையும் இல்லை என்றார். நாளைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் என்றார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய... https://t.co/nepIqeLanO