திருச்சியில் ஆசிரியர்கள் சங்கத்தினர் மருத்துவ உபகரணங்கள் மற்றும் 30 லட்சம் நிவாரணம் தொகை அமைச்சர்களிடம் வழங்கினர்

திருச்சியில் ஆசிரியர்கள் சங்கத்தினர் மருத்துவ உபகரணங்கள் மற்றும் 30 லட்சம் நிவாரணம் தொகை அமைச்சர்களிடம் வழங்கினர்

திருச்சி கிழக்கு, திருவெறும்பூர் மற்றும் மணப்பாறை ஆகிய  சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த குடும்ப அட்டைத்தாரர்களுக்கு கொரோனா இரண்டாம் தவணை நிவாரண நிதி மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர்,  திருச்சி கிழக்கு தொகுதி  சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் கலந்து கொண்டு ரூபாய் 2000 நிவாரண தொகை மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை மக்களுக்கு வழங்கினர்.

இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக ( ஜாக்டோ ஜியோ) தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் மூலமாக வழங்கினர்.

அதே போல தமிழ்நாடு தனியார் பள்ளி (அரசு உதவி பெறும் பள்ளிகள்) ஆசிரியர் அலுவலர் சங்கம் சார்பில் கொரோனா நிவாரண நிதியாக 16 லட்சம் ரூபாய்கான காசோலையை அமைச்சர்களிடம் வழங்கினர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve