கூட்டுறவுத்துறையில் 3997 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்- முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் திருச்சியில் பேட்டி

கூட்டுறவுத்துறையில் 3997 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்- முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் திருச்சியில் பேட்டி

கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன் திருச்சி அண்ணா நகர் கூட்டுறவு வங்கியில் , உறுப்பினர்களுக்கு கடனுதவி வழங்குதல் மற்றும் வாகனத்தில் வங்கி இயக்கத்தினை தொடங்கி வைத்தார்.

பின்னர் கல்லுக்குழி நியாய விலைக்கடையினையும், டிவிஎஸ் டோல்கேட், மின் வாரிய அலுவலகம் அருகிலுள்ள நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கினையும் நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன் ....

தமிழ்நாட்டில் 20 இடங்களில் 2.86 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு நெல் பாதுகாப்பு கிடங்கு கட்டப்பட்டு வருகிறது.

அரிசி கடத்தலை தடுக்க போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த கடத்தலில் ஈடுபடும் முக்கிய நபர்களை கைது செய்ய கூறியுள்ளோம். அதன்படி சக்கரவர்த்தி என்கிற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரிசி கடத்தலில் ஈடுபட்ட 111 பேரை கள்ளச்சந்தை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளோம்.

கூட்டுறவுத்துறையில் 3997 காலிப்பணியிடங்கள் இருக்கிறது. அதை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ரேசன் பொருள் வாங்காதவர்கள் குறித்து கணக்கு எடுப்பது என்பது அதை ஒழுங்கப்படுத்ததானே தவிர வேறு எதற்கும் இல்லை. அது தொடர்பாக எந்த பீதியும் தேவையில்லை.

பொருட்களே தேவையில்லை என்றால் அவர்களுக்கு கெளரவ அட்டை என்கிற முறை உள்ளது. 60 ஆயிரம் பேர் தமிழ்நாட்டில் அதை வைத்துள்ளார்கள். ரேசனில் பொருட்களே வாங்காதவார்கள் கெளரவ அட்டை வாங்கி கொள்ளலாம் என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...   https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO