மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கிய திருச்சி இந்திய குழந்தைகள் நல குழுமம்
கொரானா தொற்றின் இரண்டாவது அலை இந்தியா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. இன்றைக்கு பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. முதல் அலையில் முதியோர்கள் அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில் இரண்டாவது அலையில் இளம் வயதினர் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மூன்றாவது அலையில் குழந்தைகள் வளரிளம் பருவத்தினர் அதிகம் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் கணித்திருக்கிறார்கள். வருமுன் காப்பதே சிறந்தது குழந்தைகளின் எதிர்கால வாழ்வை பாதிக்காத விதம் இருப்பதற்காக திருச்சி மகாத்மா காந்தி அரசு நினைவு மருத்துவமனையில் குழந்தைகள் உள் நோயாளி பிரிவை மேம்படுத்தி மூன்றாம் அலைக்கு தயார்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருச்சி பிரிவு இந்திய குழந்தைகள் நலக் குழுமத்தின் நிறுவன செயலாளர் குழந்தைகள் நல மருத்துவர் லட்சுமி நாராயணன் அவர்கள் வழிகாட்டுதலின்படி குழந்தைகளின் நலனைக் காப்பதற்காக. பேரிடர் காலத்தில் தேவைப்படும் மருத்துவ உபகரணங்களை கொடையாக வழங்கும் பணியில் இந்திய குழந்தைகள் நல குழுமத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து இந்திய குழந்தைகள் நலக்குழு திருச்சி பிரிவின் செயலாளர் மருத்துவர் தங்கவேல் கூறுகையில், இன்றைக்கு தடுப்பூசி போடப்பட்டு வருவதால் இரண்டாவது அலையை கட்டு படுத்திட முயற்சித்து வருகிறோம் அதேசமயம் மூன்றாவது அலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கும் பொழுது குழந்தைகளுக்கு தடுப்பூசி எதுவும் போடாத நிலையில் அவர்கள் பாதிப்பிற்குள்ளாக அதிக வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் கூறியதை அடுத்து அவர்களுக்கு உதவும் விதமாக 3 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை கொடையாக வழங்கியுள்ளோம்.
ஆக்சிஜன் அளவை கண்டறியும் கருவி(Pulse oxymeter), ஆக்சிஜன் வழங்க பதப்படுத்தும் குடுவைகள் (flow meter), ஆக்சிஜன் செலுத்தும் குழாய்கள் (nasal canulas), ஆக்சிஜன் செலுத்தும் கவசங்கள் (masks), உடல் வெப்பநிலை அளவவீட்டு கருவிகள் (infra red thermometer )இரத்த மாதிரிகளை சேமிக்கும் குளிர்விப்பான்(Refrigerator) மாத்திரை வழங்க காகித கவர்கள் ஆகிய கோவிட் நோயாளிகளுக்கு சிகிக்சை செய்ய தேவைப்படும்
உபகரணங்கள் வழங்கப்பட்டன.
அதேபோன்று குழந்தைகள் நலபிரிவில் உள்ள மருத்துவ சாதனங்களை மேம்படுத்த ஒரு லட்ச ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
இந்திய குழந்தைகள் நலக்குழு திருச்சி பிரிவின் தலைவருமான டாக்டர். ராகவன் அவர்கள் இந்த சேவை பணிக்கு நன்கொடை வழங்கிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.
இந்திய குழந்தைகள் நலக் குழுமம் திருச்சி பிரிவு தலைவர் மருத்துவர்.ராகவன்,செயலாளர்
மருத்துவர். அ.தங்கவேல் மற்றும் பொருளாளர் மருத்துவர் மேகநாதன் ஆகியோர் அரசு மருத்துவமனையின் தேவைகளை கேட்டு பெற்று இந்த பணிகளை ஒருங்கிணைத்து உள்ளனர்.
அரசு மருத்துவமனைக்கு இந்தியக் குழந்தைகள் நலக்குழுமம் திருச்சி பிரிவு வழங்கிய மருத்துவ உபகரணங்களை மருத்துவமனையின் முதல்வர் கே. வனிதா மற்றும் குழந்தைகள் நலத்துறையின் பேராசிரியர்களான
மரு. மைதிலி மற்றும் மரு. சிராஜிதின் நசீர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/I7AbpT9vFZAKjl63kSeYJx