7 குளிர்பான நிறுவனங்களுக்கு சீல் - 15,620 குளிர்பான பாட்டில்கள் பறிமுதல்
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர், சென்னை அவர்களிடமிருந்து வரப்பெற்ற உத்தரவினை அடுத்து அறிவுசார் சொத்து உரிமைகள் அமலாக்க காவல்துறையினரோடு இணைந்து திருச்சிராப்பள்ளி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர்.R.ரமேஷ்பாபு மற்றும் காவல் ஆய்வாளர் முனிஷ், அறிவுசார் சொத்து உரிமைகள் அமலாக்க காவல்துறை,
திருச்சி மாவட்டம் அவர்களின் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழுவும், அறிவுசார் சொத்து உரிமைகள் அமலாக்க காவல் துறையின் குழுவும் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட, மாநகர ஆயுதபடை காவலர்களும் இணைந்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள 7 குளிர்பான தொழிற்சாலைகளை ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் போது கீழே கொடுக்கப்பட்டுள்ள 7 தொழிற்சாலைகளில் பிரபலமான நிறுவனத்தின் பெயர்களை அச்சிடப்பட்ட பாட்டில்களில் இவர்கள் தங்களது நிறுவனத்தின் லேபிளை ஒட்டி பொதுமக்களுக்கு தவறுதலான வழிகாட்டுதல் மற்றும் உணவு பாதுகாப்பு(ம)தர நிர்ணய சட்டம், 2006 விதிமுறைகளை பின்பற்றாமலும் பொதுமக்களுக்கு பிரபல நிறுவனங்களின் குளிர்பானங்களை தருவது போன்று விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இந்த ஆய்வின் போது, மேலே குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களிலிருந்து மேலே கூறியபடி உள்ள குறைபாடுகள் உள்ள சுமார் 12,370 (பன்னிரெண்டாயிரத்து முந்நுாற்று எழுபது) குளிர்பானம் நிரப்பப்பட்ட பாட்டில்களும், மற்றும் 3298 (மூவாயிரத்து இருநுாற்று தொண்ணுணூற்று எட்டு) காலி பாட்டில்களும், அதன் மொத்த பறிமுதல் அளவு 2650 (இரண்டாயிரத்து அறுநூற்று ஐம்பது) லிட்டர் ஆகும். இதன் மதிப்பு ரூ.1,11,592/- (ரூபாய் ஒரு இலட்சத்து பதினோராயிரத்து ஐநூற்று தொண்ணுாற்று இரண்டு) ஆகும்.
இவையனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு, 7 சட்டப்பூர்வ உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு தமிழக அரசின் உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆய்வில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பாண்டி, செல்வராஜ், சையத்இப்ராஹீம், சண்முகசுந்தரம், கந்தவேல், அன்புசெல்வன், மகாதேவன் மற்றும் அறிவுசார் சொத்து உரிமைகள் அமலாக்க காவல்துறையை சார்ந்த ஆனந்தகுமார், அருண், ராஜ்குமார், குமார் காவலர்கள் மற்றும் பஜ்ராபேகம் ஆகியோர் அடங்கிய குழு ஆய்வில் ஈடுபட்டனர்.
மேலும், மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.R.ரமேஷ்பாபு கூறுகையில்..... குளிர்பானங்கள் நிறுவனங்கள் பிரபல நிறுவனங்களின் பாட்டில்களை பயன்படுத்தி இனிவரும் காலங்களில் தயாரிப்பில் ஈடுபடக்கூடாது என்றும், பொதுமக்களும் தாங்கள் இது போன்ற குளிர்பான பாட்டில்களை பார்க்கும் போது கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவு பாதுகாப்பு துறை புகார் எண்ணிற்கு தகவல் கொடுக்கப்பட்டால், தங்களுடைய தகவல் ரகசியம் காக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
மாவட்ட புகார் எண் : 96 26 83 95 95
மாநில புகார் எண் : 94 44 04 23 22
1) Sakthi Colour Company, No.1/78, Mela Street, Thayanur, Manikandam, Trichy - 620002
2) Vins Badam Milk and Soft Drinks, No.5/925, Periyar Nagar, Valavanthankottai, Trichy - 620015
3) Divya Foods, No.13, Pitchai Nagar, Varaganeri, Trichy - 620008
4) Only one Export Traders, No. 132/5, Kodappu Road, UKT Malai, Trichy-620102
5) Sri Mappillai Vinayagar Soda Factory, Anaikatti Maidanam, Beema Nagar, Trichy.
6) New Centa Beverages, No.22/1, Thuraikudi, Avoor(Po), Trichy.
7) New Rathna Soda & Co., Excise Nagar, Kallikudi, Trichy - 620009.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision