கொரானா  நோயாளிகளுக்கு சமூக வலைதளங்கள் மூலம் உதவிடும் "கோவிடுதலை" தன்னார்வக்குழு

கொரானா  நோயாளிகளுக்கு சமூக வலைதளங்கள் மூலம் உதவிடும் "கோவிடுதலை" தன்னார்வக்குழு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் முடிந்த பல்வேறு உதவிகளை சமூக அமைப்பினர் மற்றும் தன்னார்வலர்கள் செய்து வருகின்றனர். இதில்  தற்போது மருத்துவமனை படுக்கை வசதிகள் குறித்த தகவல்களை உதவி தேவைப்படுபவர்களுக்கு பயன்படும் விதமாக தெரிவிக்கவும், விதமாக பல தன்னார்வக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றனர்.


அந்த வரிசையில் கோவிடுதலை என்ற தன்னார்வலர்கள் 200க்கும் மேற்பட்டவர்கள் இணைந்து தமிழகம் முழுவதும் சமூக வலைதளங்களை பயன்படுத்தி உதவி தேவைப்படும் நோயாளிகளுக்கு உதவி வருகின்றனர். குழுவின் தன்னார்வலர்கள் நம்மோடு பேசுகையில்.. இந்த குழுவில் 200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதால் அனைத்து வயதினரும்  தன்னார்வலராக பணியாற்றி வருகின்றனர். 

தமிழகம் முழுவதும் எங்கள் குழு மூலம் உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்து வருகின்றோம். இக்குழுவில் ஒரு படிவத்தை தயார்படுத்தி உள்ளோம். அந்த படிவத்தில் உதவி தேவைப்படுபவர்கள் இந்த படிவத்தை நிரப்பி விட்டால் இது நேரடியாக அரசு கட்டளை மையத்தை தகவல் பகிரப்பட்டு விடும். எனவே அவர்களோடு இணைந்து செயல்படுவதால் உடனடியாக உதவி தேவைப்படுபவர்களுக்கு அரசே நடவடிக்கை மேற்கொள்ளுமாறு செயல்படுத்தி வருகிறோம்.

அதே சமயம் உதவி தேவைப்படுபவர்களுக்கு தன்னார்வலர்களும் மருத்துவமனைகளை தொடர்புக் கொண்டு உதவி வருகிறோம். மருத்துவரின் ஆலோசனையோ, ஆம்புலன்ஸ் சேவையோ தேவைப்பட்டால், சமூக வலைதள பக்கங்களில் தெரிவியப்படுத்தலாம்.

இந்த படிவத்தை நிரப்புங்கள்: http://bit.ly/coviduthalai-bed-request-form

முகநூல் : https://www.facebook.com/COVIDuthalai/

ட்விட்டர் : https://twitter.com/coviduthalai/

இன்ஸ்டாகிராம் : https://www.instagram.com/coviduthalai/

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/I7AbpT9vFZAKjl63kSeYJx